Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”உடம்ப இரும்பாக்கிக்கடா கிரிகாலா” மாஸ் இலக்கை நோக்கி ஆஸி.. இந்தியாவை வெளுக்கும் வெறித்தன மீம்ஸ்!

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Best Memes from Social Media, After the day 3 Match between India - Australia in the WTC Final 2023

நேற்றைய நாளில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய களமிறங்கிய போது அந்த அணியின் லபுஷேன் பேட்டிங் செய்ய தயாராகி சிறிது நேரம் தூங்குவார். ஆனால் அவர் கண்கள் மூடி திறப்பதற்குள் வார்னரின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாவது. அதனை அந்தியன் படத்தில் தூங்க முயற்சிக்கும் அம்பியை, திடீரென எழுப்பும் விவேக் போல், தூங்கிய லபுஷேனை சிராஜ் எழுப்பியதாக உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Best Memes from Social Media, After the day 3 Match between India - Australia in the WTC Final 2023

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ரஹானே 89 ரன்கள் குவித்து ஃபாலோ ஆனை தவிர்க்க வைப்பார். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியது. இதனை சிஎஸ்கே அணிக்காக ரஹானே சிறப்பாக ஆடிய போது, இதுதான் உங்களின் சிறந்த ஆட்டமா? என்று ஹர்ஷா போக்ளே கேள்வி எழுப்புவார். அதற்கு ரஹானே, எனது சிறந்த ஆட்டம் இனிதான் வரும் என்று பதில் அளிப்பார். அதனை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Best Memes from Social Media, After the day 3 Match between India - Australia in the WTC Final 2023

ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட இலக்கு 263 ரன்கள் தான். அதுவும் 1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி விளையாடிய ஆட்டம். அதற்கு பின் எந்த அணியும் ஓவல் மைதானத்தில் பெரிய இலக்கை சேஸிங் வெல்லவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னிலையோ 296 ரன்களை எட்டியுள்ளது. இதனை கிரிகாலன் மேஜிக் ஷோ வடிவேலுவாக இந்திய அணியையும், அந்த ரெக்கார்டையும் இந்திய அணி ரசிகர்கள் பார்ப்பதையும் வைத்து, "அங்க பார்த்துவிட்டு அப்படியே இங்க பார்ப்பாங்களே.. உடம்ப இரும்பாக்கிக்கோடா கிரிகாலா" என்று இந்திய அணி சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Best Memes from Social Media, After the day 3 Match between India - Australia in the WTC Final 2023

இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்த போது ஜடேஜா, ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஃபாலோ ஆனை தவிர்க்க முடியுமா என்று சிந்தித்த நிலையில், சுமார் 300 ரன்களை சேர்க்க முடிந்தது. இதனை சகுனி படத்தில் பெண்களுக்கு ராதிகாவின் அடியாட்கள் வேலை செய்வார்கள். வேலை செய்ய முடியாமல் இருக்கும் பெண்களுக்கு அனைத்து வேலைகளையும் செய்வார்கள். அதில் பெண்களாக இருப்போரை இந்திய ரசிகர்களாகவும், ஜடேஜா, தாக்கூர் மற்றும் ரஹானேவை அடியாட்களாகவும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Story first published: Saturday, June 10, 2023, 8:30 [IST]
Other articles published on Jun 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+