Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... அதிரடி காட்டும் எஸ்ஆர்எச் பௌலர்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் 6வது போட்டி இன்றைய தினம் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஒன்றைய ஆண்டுகளாக காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்த புவனேஸ்வர் குமார் கடந்த இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி காட்டினார்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் அதிரடி காட்டி வருகிறார்.

வெற்றிக்கான கட்டாயம்

வெற்றிக்கான கட்டாயம்

ஐபிஎல் 2021 தொடரின் 6வது போட்டியில் இன்றைய தினம் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியில் கேகேஆருடன் மோதி எஸ்ஆர்எச் அணி தொடரின் முதல் போட்டியில் விளையாடி தோல்வியுற்றதையடுத்து இன்றைய போட்டியில் வெற்றி பெறும் கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

ரன்கள் குறைப்பு

ரன்கள் குறைப்பு

இந்நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆர்சிபியுடன் மோதிவரும் எஸ்ஆர்எச் அணி, தன்னுடைய தீவிரத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. ஆரம்பம் முதலே ஆர்சிபியின் ரன்களை குறைத்து வருகிறது. 10 ஓவர்களுக்கு ஆர்சிபிக்கு 60 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தது.

சன்ரைசர்ஸ் அபாரம்

சன்ரைசர்ஸ் அபாரம்

இந்நிலையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வெற்றி கொண்ட ஆர்சிபியின் ரன்களை குறைத்ததுடன் அந்த அணியின் விராட் கோலி உள்ளிட்ட 5 வீரர்களையும் 15 ஓவர்களில் அடுத்தடுத்து வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பாக பௌலிங் செய்து வருகிறது.

சிறப்பாக வீழ்த்திய புவனேஸ்வர்

சிறப்பாக வீழ்த்திய புவனேஸ்வர்

துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கிய நிலையில், தேவ்தத் படிக்கல்லை 11 ரன்களில் அவுட்டாக்கி வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார். 2 ஓவர்களை மட்டுமே போட்டு 10 ரன்களை கொடுத்து ஆர்சிபியின் முக்கிய விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார். இதையடுத்து அந்த அணி தடுமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. விராட் கோலியும் 33 ரன்களில் அவுட்டானார்.

சிறப்பான புவனேஸ்வர்

சிறப்பான புவனேஸ்வர்

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளிலும் சிறப்பான கம்பேக்கை கொடுத்திருந்த புவனேஸ்வர் குமார், இதையடுத்து ஐசிசி மார்ச் மாதத்திற்கான வீரராக தேர்வானார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளறது.

Story first published: Wednesday, April 14, 2021, 21:14 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+