Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமா, புவி ஏன் காயத்தோடு விளையாடினார்?... தயவுசெய்து அதை ரவி சாஸ்திரியிடம் கேளுங்க!

Recommended Video

புவனேஸ்வர் ஏன் காயத்தோடு விளையாடினார்?...வீடியோ

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் முதுகில் ஏற்பட்ட காயத்தோடு பங்கேற்றார். தற்போது அந்த காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 18 உத்தேச வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடிக்கவில்லை. காயத்தோடு இருக்கும் புவனேஸ்வர், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடியது எப்படி? என்பது தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.

புவனேஸ்வர் குமார், ஐபிஎல் தொடங்கிய போதே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் முடிந்ததில் இருந்து தற்போது இங்கிலாந்து தொடர் தொடங்கும் வரை அவர் காயத்தால் அவதிப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உத்தேச அணியில் சேர்க்கப்பட்டாலும், காயத்தோடு அவர் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் ஷங்கர் பாசு, இதை எப்படி கையாண்டார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வீரர்கள் யாரெனும் காயம் அல்லது உடற்தகுதி பிரச்சனைகளில் இருந்தால் அது குறித்து இவர்கள் அணி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில், புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இவர்கள் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியதை எப்படிக் கையாண்டார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சாஸ்திரியிடம்தான் கேட்க வேண்டும்

சாஸ்திரியிடம்தான் கேட்க வேண்டும்

பிசிசிஐ அதிகாரி ஒருவரிடம் காயத்தோடு புவனேஸ்வர் குமார் எப்படி மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் என கேட்கையில், "தயவுசெய்து ரவி சாஸ்த்திரியிடம் போய், அந்த கேள்வியை கேளுங்கள்" என கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர் முழு உடற்தகுதியில் இல்லை என்றால், அணியில் எப்படி சேர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

உடல் தகுதி சரியில்லை

உடல் தகுதி சரியில்லை

தற்சமயம் நாங்கள் "அவர் காயம் மேலும் மோசமாகிவிட்டது. அவர் முழு உடற்தகுதியில் இல்லை" என்பதை ஒப்புக்கொள்கிறோம். டெஸ்ட் தொடரில் அவர் முக்கிய வீரர் என்ற நிலையில், காயத்தை மேலும் மோசமாக்கும் வகையில் ஒருநாள் போட்டியில் அவர் ஏன் சேர்க்கப்படவேண்டும்?" என தெரிவித்தார்.

 அப்பவே சொன்னோம்

அப்பவே சொன்னோம்

புவனேஸ்வரின் உடற்தகுதி குறித்து அந்த அதிகாரி கூறுகையில், "ஐபிஎல்-ஐ பொறுத்தவரை புவி பதினேழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் ஆடவில்லை. பிசிசிஐ அவரது ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் அவருக்கு ஏற்படும் பணிச்சுமை குறித்து கவனிக்குமாறு கூறினோம். அதன் பின் இங்கிலாந்து தொடருக்கு அவர் தயாராகும் வகையில், நாங்கள் அவருக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் ஓய்வளித்தோம். ஆனால், தற்போது சில விஷயங்கள் ஒழுங்கற்று, குழப்பமான முறையில் நடந்துள்ளது" என கூறினார்.

திடீரென பங்கேற்றது எப்படி

திடீரென பங்கேற்றது எப்படி

இந்த பிரச்னையில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. காயம் காரணமாக சில போட்டிகள் ஓய்வளிக்கப்பட்ட புவனேஸ்வர், திடீரென மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்றது எப்படி? அது குறித்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், இந்த முடிவு அவரது காயத்தை மேலும் மோசமாக்கும் என அறிக்கை அளித்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், ஐபிஎல் முதல் காயத்தில் இருப்பவர் யோ-யோ டெஸ்டில் பாஸ் செய்தவுடன் "உடற்தகுதி பெற்றுவிட்டார்" என இங்கிலாந்து தொடரில் எவ்வாறு சேர்க்கப்பட்டார்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

உடற்தகுதி இல்லாதவர்கள் அணியில் இருக்கக்கூடாது என சில நாட்கள் முன்பு யோ-யோ டெஸ்ட் பற்றி கூறிய ரவி சாஸ்திரி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வாரா?






Story first published: Thursday, July 19, 2018, 9:44 [IST]
Other articles published on Jul 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+