தொடையில வலி... 3 ஓவர்களை மட்டுமே போட்ட பௌலர்... போட்டியில இருந்து பாதியிலயே வெளியேற்றம்
சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.
இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பௌலர் காயத்தால் அவதியுற்று போட்டியிலிருந்து இடையிலேயே விலகியது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயத்தால் விலகிய பௌலர்
காயம் காரணமாக விலகியிருந்த பௌலர் புவனேஸ்வர் குமார் கடந்த 2020 சீசனில் மீண்டும் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்து விளையாடினார். ஆனால் சிஎஸ்கேவிற்கு எதிரான 4வது போட்டியிலேயே அவர் மீண்டும் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார்.

சிறப்பான புவனேஸ்வர்
இந்நிலையில் தன்னுடைய பிட்னசை நிரூபித்த அவர், கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடினார். ஒருநாள் தொடரின் 3 போட்டிகளில் பௌலிங் செய்த அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய சிறப்பான பௌலிங்கால் அனைவரையும் கவர்ந்தார். பாராட்டுக்கள் குவிந்தன.

மீண்டும் தொடையில் வலி
இந்நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல்லில் தனது அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு மீண்டும் தொடையில் வலி ஏற்பட்டுள்ளது.

வீழ்த்திய புவனேஸ்வர்
முதல் 3 ஓவர்களை சிறப்பாக போட்ட அவர் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். முதல் ஓவரை மிகவும் டைட்டாக போட்டு 6 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இரண்டாவது ஓவரில்தான் ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். பவர்ப்ளேவில் 3வது ஓவரை போட்ட அவர் தனது இறுதி ஓவரை போடுவதற்கு முன்பாக அவருக்கு வலி ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications