Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை தான் முக்கியம்.. ஐபிஎல்லில் வெளியேறுவேன்? சொன்ன இந்திய வீரர்

டெல்லி: உலக கோப்பைக்கு தயாராகும் பொருட்டு... ஐபிஎல் தொடரின் முதல் பாதியை மட்டும் விளையாடப் போவதாக புவனேஸ்வர் குமார் சூசகமாக கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது.அதற்காக ஒவ்வொரு அணியும், வீரர்களை தயார் செய்து வருகிறது.

Bhuvneshwar kumar hints at rest in ipl second half

இந்திய அணியும் உலகக் கோப்பை அணியை தேர்வு செய்ய புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அணியை தயார் செய்து வருகின்றது. உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட தொடருக்காக தேர்வாகும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் தவிர்ப்பது நல்லது என்ற கோரிக்கை அண்மை காலமாக வலுத்து வருகிறது.

இந்நிலையில் உலக கோப்பைக்கு தயாராகும் பொருட்டு... ஐபிஎல் தொடரின் முதல் பாதியை மட்டும் விளையாடப் போவதாக புவனேஸ்வர் குமார் சூசகமாக கூறியுள்ளார். பயிற்சி எடுப்பதற்கும், உடல் நலனை கவனித்து கொள்வதற்கும், உலகக் கோப்பைக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள இருப்பதாக வங அவர் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர் குமார் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. இருப்பினும் தன் நிலை இப்படி தான் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பாக கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்காக விளையாடும் மற்ற வீரர்கள் புவனேஸ்வர் குமார் முடிவை ஆதரிப்பார்களா என்று தெரியவில்லை. மற்ற வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருப்பார்களா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.

Story first published: Friday, March 8, 2019, 14:49 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+