Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

180 ரன் கொடுத்து ஒரே ஒரு விக்கெட்.. புவனேஷ்வர் குமாருக்கு டாட்டா பைபை.. கம்பேக் கனவு முடிந்தது!

ஹாமில்டன்: சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை, நடப்பு நியூசிலாந்து தொடருடன் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வாய்ப்பளித்தும், அவர் ரன்களை வாரி வழங்கி ஏமாற்றம் அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2025-ல் 17 விக்கெட்டுகளையும், 2026-ல் 28 விக்கெட்டுகளையும் குவித்து அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார் 36 வயதான புவனேஷ்வர் குர். அதனால் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. அதனால் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்தது. கடந்த 2022 நவம்பருக்குப் பிறகு இந்திய அணி வாய்ப்பு பெற்ற புவனேஷ்வருக்கு, இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணம் மோசமாகவே அமைந்தது.

Bhuvneshwar Kumar International Comeback Might Have Ended After Dismal NZ T20I Series Performance

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு பிளேயிங் 11-ல் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அந்த 4 போட்டிகளிலுமே அவர் பேட்டர்களுக்கு ரன் விருந்து வைத்தார். முதல் போட்டியில் விக்கெட் இன்றி 49 ரன்கள், 2-வது போட்டியில் 50 ரன்களுக்கு 1 விக்கெட், 3-வது போட்டியில் 40 ரன்கள் மற்றும் 5-வது போட்டியில் விக்கெட் இன்றி 41 ரன்கள் என வாரி வழங்கினார்.

ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் 16 ஓவர்கள் பந்துவீசிய புவனேஷ்வர் குமார், 180 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 180 ஆகவும், எகானமி ரேட் 11.25 ஆகவும் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. சர்வதேச டி20 அரங்கில் பேட்டர்களை அச்சுறுத்தும் வேகம் அவரிடம் சுத்தமாக இல்லை.

"3-2 என இந்தியா வென்றிருக்கலாம்.. ஆனா".. கடைசி மேட்ச்சிலும் வென்ற பின் கேப்டன் சான்ட்னர் பேச்சு

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் என அதிவேக இளம் பந்துவீச்சாளர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், கிடைத்த 4 வாய்ப்புகளையும் வீணடித்த புவனேஷ்வர் குமார் இனி இந்திய அணிக்குத் திரும்புவது சாத்தியமே இல்லை எனக் கருதப்படுகிறது. அவரது சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் இதோடு முடிவுக்கு வந்துவிட்டது என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Sunday, November 1, 2026, 17:03 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+