சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இன்றைய லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. சிஎஸ்கே அணியின் இன்று பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி, அவரை வெளியே அமர வைத்துவிட்டார்.

ராஜஸ்தானுக்கு எதிராக கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் வென்று, வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய பொறுப்பில் சிஎஸ்கே உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதும் பகலில் நடைபெறும் ஆட்டம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும்.
மேலும் ஆடுகளம் காய்ந்த நிலையில் இருப்பதால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சிரமமாக இருக்கும் என்பதால், தோனிக்கு இன்றைய டாஸ் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்வது மூலம் முதலிடத்திற்கு செல்ல முடியும்.