For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL CSK vs MI - சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு பிரச்சினை தீர்ந்துவிட்டது.. களமிறங்கிய பிளாக் பாந்தர்

மும்பை : ஐபிஎல் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலமாக காணப்படுகிறது. இதேபோன்று மோயின் அலியும் சிவம் துபேவும் பேட்டிங்கில் கூடுதல் பலத்தை சேர்க்கிறார்கள்.

ஜடேஜா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் இது நெடுந்தொடர் என்பதால் அவர்கள் ஃபார்முக்கு வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்சனையாக இருப்பது வேகப் பந்துவீச்சு தான். வெளிநாட்டில் இருந்து பந்துவீச்சாளர் பெரிய அளவில் யாரும் இல்லை.

இதனால் சிஎஸ்கே பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறது. இதனை தீர்க்க வேண்டும் என்றால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் வருவதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துக்கூறி வந்தனர். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

Big boost for CSK ahead of Mumbai indians clash as sisanda magala joints team

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் சிசாண்டா மகாலா இந்தியா திரும்பி உள்ளார். மகாலா ரன்களை கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். இதேபோன்று பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். சிசந்தா மகாலா கடைசியாக விளையாடிய எதிரான ஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கடைசியாக விளையாடிய நான்கு சர்வதேச போட்டிகளில் சிசான்தா மகாலா 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். சிசாந்தா மகாலாவின் வருகை சென்னை அணியின் பலத்தை கூட்டி இருக்கிறது.

நேற்று மும்பை வந்துள்ள மகாலா தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் வரும் சனிக்கிழமை மும்பையில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மகாலா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்டனர் சார்ந்த இடத்தை தியாகம் செய்ய நேரிடும்.

Story first published: Thursday, April 6, 2023, 16:30 [IST]
Other articles published on Apr 6, 2023
English summary
Big boost for CSK ahead of Mumbai indians clash as sisanda magala joints team சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு பிரச்சினை தீர்ந்துவிட்டது.. களமிறங்கிய பிளாக் பாந்தர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+