பந்துவீச வந்த பதிராணா..திடீரென்று தடுத்த நடுவர்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி..நிறுத்தப்பட்ட போட்டி
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே, குஜராத் அணி அணிகள் மோதிய ஆட்டத்தில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.
எனினும் விஜய் சங்கரும், ரசித் கானும் இருந்தனர். கடைசி 30 பந்தில் 71 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது 16வது ஓவரை பதிரானாவை வீச கூறி தோனி அழைத்தார்.

அப்போது, அவரை நிடுவர் திடீரென்று தடுத்தார். இதனால் கடுப்பான தோனி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிரானா களத்தில் 8 நிமிடத்திற்கு மேல் களத்தில் இல்லை என்றும், இதனால் பதிரானா எவ்வளவு நேரம் சென்றாரோ, அவ்வளவு நேரம் களத்தில் பில்டிங் நின்றால் தான் பந்துவீச முடியும் என்று நடுவர்கள் கூறினர்.
விதிப்படி 8 நிமிடம் மட்டும் தான் அனுமதி ஆகும். ஆனால் பதிரானா ஒரு நிமிடம் தாமதமாக களத்திற்கு வந்ததார். ஆனால் இதனை ஒப்பு கொள்ளாத தோனி, தொடர்ந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து எந்த பவுலரை பந்துவீச சொல்லலாம் என்று கூறி நேரத்தை செலவிட்டார்.
அதற்குள் நேரம் கடந்துவிட்டது. இதனையடுத்து மீண்டும் பதிரானாவை தோனி பந்துவீச அழைத்தார். தோனி செய்தது தவறு என்றும், நடுவர்கள் சொன்னதை கேட்டு தோனி வேறு ஒரு பவுலைரை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் ஹர்சா போக்அல கூறியுள்ளார். இதன் காரணமாக நேரம் வீணாகிவிட்டதாக ஹர்சா போக்லே கூறினார்.


Click it and Unblock the Notifications