Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேர ட்விஸ்ட்.. ரோகித் - டிராவிட் இடையே வாக்குவாதம்.. ப்ளேயிங் 11ல் திடீர் பிரச்சினை- என்ன ஆனது

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் கடைசி வரை ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் ரோகித் - டிராவிட் இடையேயான கருத்து மோதல் தான் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு நாக்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியே தீர வேண்டும். மற்றொருபுறம் ஆஸ்திரேலிய அணியும் இந்திய மண்ணில் சாதிக்க வேண்டும் என காத்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ப்ளேயிங் 11ல் குழப்பம்

ப்ளேயிங் 11ல் குழப்பம்

இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் பெரும் வாக்குவாதம் நிலவி வருகிறது. மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவரின் இடத்தை நிரப்புவதற்காக தான் சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது. ஓப்பனர் பணியை கே.எல்.ராகுல் எடுத்துக்கொண்டதால் கில்லுக்கான வாய்ப்பு மிடில் ஆர்டரில் தான் உள்ளது. மறுபுறம் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக காத்துள்ளார்.

ரோகித்தின் ப்ளான்

ரோகித்தின் ப்ளான்

இந்த விவகாரத்தில் ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. அதாவது ஸ்பின்னர்களுக்கு சாதகமான இந்த களத்தில் மிடில் ஆர்டரில் கொஞ்சம் அச்சமின்றி தூக்கி அடிக்கக்கூடிய சூர்யகுமார் யாதவ் தேவை என ரோகித் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் இல்லாத குறையை சூர்யகுமாரால் தீர்க்க முடியும். ஆனால் ராகுல் டிராவிட்டிற்கு சுப்மன் கில் மீது தான் கவனம் உள்ளது.

டிராவிட்டின் காரணம்

டிராவிட்டின் காரணம்

மிடில் ஆர்டரில் தூண் போல நிலைத்து நின்று ஆடக்கூடியவர் தான் ஸ்ரேயாஸ் ஐயர். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக விளையாடக்கூடியவர்கள் தேவை. அந்தவகையில் பார்த்தால் சுப்மன் கில் பொருத்தமாக இருப்பார். விராட் கோலியை போலவே சீரான வேகத்தில் ரன்னை உயர்த்தி செல்கிறார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என தொடர்ச்சியாக சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதால் அவரை தேர்வு செய்ய டிராவிட் கூறியுள்ளார்.

 திட்டங்களே மாறும்

திட்டங்களே மாறும்

இந்த ஒரு முடிவால் இந்திய அணியின் திட்டமே மாறக்கூடும். இதில் கேப்டன் சொல்வதை கேட்பார்களா? பயிற்சியாளார் சொல்வதை கேட்பாளர்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாக்பூர் பிட்ச்-ஐ பொறுத்தவரையில் முதல் நாளில் இருந்தே ஸ்பின் ஆகும் வகையில் உருவாக்கியிருப்பதாக தெரிகிறது. இதனால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர் ஒருவர் நிச்சயம் தேவை.

Story first published: Thursday, February 9, 2023, 7:44 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+