Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ரிடி, கெயில் என சீறும் சீனியர் சிங்கங்கள்.. களைகட்டுகிறது டி20 உலக கோப்பை

கொல்கத்தா: கிறிஸ் கெயில், ஷாகித் அப்ரிடி என சீனியர் வீரர்களின் ருத்ர தாண்டவத்தால் களை கட்டியுள்ளது உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட்டின் முக்கியமான சூப்பர்-10 சுற்றின் முதல் போட்டியை பார்த்தவர்களுக்கு, அச்சச்சோ, இந்த சீரிசில் ரன்னை பார்க்க முடியாது போல இருக்கிறதே.. என்ற எண்ணம் தோன்றியிருக்கும்.

பெரிய பேட்டிங் வரிசை கொண்ட இந்தியாவே 100 ரன்களை கூட தாண்ட முடியாமல் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுதான் இந்த விரக்திக்கு காரணம்.

பேட்டிங் பிட்ச்

பேட்டிங் பிட்ச்

ஆனால், இந்திய பிட்சுகள் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமானவைதான் என நேற்றைய இரு போட்டிகளின் மூலம் ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள்.

களைகட்டியது உலக கோப்பை

களைகட்டியது உலக கோப்பை

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நடுவேயான போட்டியும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து நடுவேயான போட்டியும்தான், ரன் மழையை வெளிச்சம் போட காரணம். ரன் குவிப்பு காரணமாக ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கு வர தொடங்கியுள்ளதால் உலக கோப்பை களை கட்டத்தொடங்கியுள்ளது.

சீனியர் சிங்கங்கள்

சீனியர் சிங்கங்கள்

அதிலும், சீனியர் வீரர்கள் தங்கள் வழக்கமான ஒத்திசைவோடு அடித்து நொறுக்குவதை பார்க்கும் சுகமே தனி. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயிலும், வங்கதேசத்துக்கு எதிராக அப்ரிடியும் அதைத்தான் செய்தனர்.

சதம் விளாசிய கெயில்

சதம் விளாசிய கெயில்

183 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வெஸ்ட் இண்டீசில், கெயில், 48 பந்துகளிலேயே சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதில் 11 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஒவ்வொன்றும் முத்து, முத்தான ஷாட்டுகள் என்பதால் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

கெயில் புயல்

கெயில் புயல்

கெயில் புயல் வீசத்தொடங்கினால் ரசிகர்கள் காட்டில் அடை மழைதான். எந்த அணி ரசிகராக இருந்தாலும் கெயில் போன்ற சிறந்த வீரரின் ஆட்டத்திறமைக்கு சலாம் போடத்தான் செய்வார்கள்.

அப்ரிடியின் அதிரடி

அப்ரிடியின் அதிரடி

அதேபோன்ற ஒரு அதிரடி வீரர்தான் ஷாகித் அப்ரிடி. இவருக்கு மட்டும் ரிட்டையர்மென்டே கிடையாதா என்று பல வருடங்களாக கேள்வியை எதிர்கொள்ளும் அப்ரிடிக்கு, இப்போது வாழ்வா சாவா பிரச்சினை. ஆசிய கோப்பையில் டக் அவுட்டுகளில் நடையை கட்டிய அப்ரிடி நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர்களின் விழி பிதுங்க வைத்துவிட்டார்.

வச்சி செய்றாங்க

வச்சி செய்றாங்க

19 பந்துகளில் 49 ரன்கள் விளாசி, 1 ரன்னில் அரை சதம் வாய்ப்பை தவறவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் அப்ரிடி. பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகளை அப்ரிடி வீழ்த்தியிருந்தார். சீனியர் வீரர்கள் சீற்றம் கொண்டு எழுந்துள்ளது ரசிகர்களை உலக கோப்பை பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. நம்ம அணி சீனியர் யுவராஜ் சாதிப்பாரா?

Story first published: Thursday, March 17, 2016, 13:05 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+