இந்திய அணியை ஆட்டி படைக்கும் அரசியல்.. கேஎல் ராகுலுக்காக சூர்யகுமார், இஷான் கிஷன் நீக்கம்..அதிர்ச்சி
கவுகாத்தி : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நடப்பாண்டில் ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் , இந்திய அணியை தயார் செய்யும் பணியில் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஜோடி உள்ளது.
இந்த தொடரில் ரோகித், கோலி , முகமது ஷமி ஆகியோர் திரும்பியுள்ளதால், பிளேயிங் லெவனில் யாரை தேர்ந்து எடுப்பார் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு வழக்கம் போல் ஏமாற்றமே மிஞ்சியது.

இஷான் கிஷன்
கேஎல் ராகுல் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வருகிறார்.இதனால் ஒருநாள் போட்டியில் துணை கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாகவும் நீக்கப்பட்டார். அணியில ஏற்கனவே விக்கெட் கீப்பராக இரட்டை சதம் அடித்துவிட்டு உள்ள இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷனுக்கே வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.

சூர்யகுமார்
ஆனால், கேஎல் ராகுலுக்காக இஷான் கிஷனுக்கு இடம் அளிக்காமல் தொடக்க வீரர் சுப்மான் கில்லை வைத்து ரோகித் சமாளித்துவிட்டார். இதே போன்று டி20 கிரிக்கெட்டில பெரிய சாதனை படைத்துவிட்டு, கடைசி போட்டியில் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். சூர்யகுமாரை காட்டிலும் ராகுல் எந்த சாதனையையும் சமீப காலத்தில் செய்யவில்லை.

ரோகித் சாதுர்யம்
இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயரை வைத்து இந்த கேள்வியும் எழாத வகையில் ரோகித் சர்மா, டிராவிட் ஜோடி பார்த்து கொண்டது. நியாயப்படி, கேஎல் ராகுலை நீக்கிவிட்டு, சூர்யகுமார் யாதவை அணியில் சேர்த்திருக்க வேண்டும். எனினும் கேஎல் ராகுலுக்கு இது கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அரசியல்
இதிலும் கேஎல் ராகுல் சொதப்பினால், அணியை விட்டு நீக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கேஎல் ராகுலும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஒரே மாநிலம் என்பதால், கேஎல் ராகுலுக்கு சாதகமாக அணி நிர்வாகம் முயற்சி செய்வதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications