Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேக்கும் ஆப்பு ? 16 கோடி ரூபாய் போச்சா? பென் ஸ்டோக்ஸ்க்கு என்னா ஆச்சு

மும்பை : ஐபிஎல் 16வது சீசன் இம்மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதில் குஜராத் டைம் அணியும் நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் போட்டியில் மோதுகிறது.

கடந்த சீசனில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற மும்பை சென்னை அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்தது.இதனால் இம்முறை ஐபிஎல் தொடரில் சாதனை படைக்க வேண்டிய உத்வேகத்தில் இரண்டு அணியுமே உள்ளது.

இந்த நிலையில் தான் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது மும்பை அணியின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

 ஸ்டோக்ஸ் நிலை

ஸ்டோக்ஸ் நிலை

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி காத்துள்ளது. சென்னை அணி ஐபிஎல் ஏலத்தில் 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்சை வாங்கியது. இதன் மூலம் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பென்ஸ் ஸ்டோக்ஸ்க்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 சிஎஸ்கே நிர்வாகம்

சிஎஸ்கே நிர்வாகம்

பென் ஸ்டோக்சின் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் வெறும் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். மேலும் பேட்டிங்கில் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனை பென் ஸ்டோக்சே கூறியுள்ளார். மேலும் தனது காயத்தின் தன்மை குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆசஸ் தொடர் நடைபெற இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை

பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை

ஒவ்வொரு இங்கிலாந்து கேப்டனுக்கும் ஆசஸ் தொடரை வெல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை. இதனால் ஸ்டோக்ஸ் ஆசஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரை தியாகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் காயம் தீவிரமாக இருந்தாலும் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதை அவர் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பிளமிங்கிடம் தமது பனிச் சுமையை குறைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 100 சதவீதம் இல்லை

100 சதவீதம் இல்லை

இதற்கு சிஎஸ்கே நிர்வாகமும் ஓகே சொல்லிவிட்டது. இதனால் ஸ்டோக்சை பத்திரமாக சென்னை அணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஸ்டோக்ஸ் வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும் தான் சென்னை அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அவரது காயம் அதிகமாக இருந்து பேட்டிங்கை பாதிக்க செய்தால் அவரை இங்கிலாந்துக்கு அனுப்பவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவெடுத்துள்ளது. இதனால் ஸ்டோக்ஸ் 100% தன்னுடைய செயல்பாட்டை ஐபிஎல் இல் வெளிப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்குல்லம் கருத்து

மெக்குல்லம் கருத்து

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பிரண்டன் மெக்குலம், சிஎஸ்கே அணி நிர்வாகம் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் வீரர்களை சரியாக கையாள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டோக்சின் நிலைமையை பிளமிங் இடம் தான் கூறிவிட்டதாகவும், சிஎஸ்கே மருத்துவர்கள் மற்றும் பயிற்சி குழு நிபுணர்கள் ஸ்டோக்சை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Story first published: Wednesday, March 1, 2023, 22:45 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+