கங்குலியை எடுக்கும் எண்ணமே கொல்கத்தாவிடம் இல்லை-அக்ரம் சூசகத் தகவல்

கங்குலியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதுகுறித்து வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆவார்.
இதுகுறித்து அக்ரம் கூறுகையில், கங்குலி எனது நெருங்கிய நண்பர். அவரை எந்த அணியாவது ஏலத்தில் எடுக்கும் என நினைத்திருந்தேன். அவரது அனுபவம், தலைமைத்துவ சிறப்பு ஆகியவற்றை எந்த அணியாவது பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதினேன். ஆனால் யாரும் அவரை எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. அவரை அனைத்து அணிகளும் முற்றிலும் புறக்கணித்துள்ளது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் அக்ரம்.
'எந்த அணியாவது' என்று அக்ரம் கூறியிருப்பதன் மூலம் கங்குலியை தனது அணியில் சேர்க்கும் எண்ணமே கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications