Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வீரர்கள்... 3 பிறந்தநாள்... கொண்டாட்டத்திற்கு ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு காரணம்!

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதலில் பௌலிங் செய்த நிலையில் 195 ரன்களை இலக்காக கொண்டு தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்திய அணியின் 3 முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தில் வீரர்கள்

கொண்டாட்டத்தில் வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கூட்டாக தங்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சிறப்பான கேம் பினிஷர்

சிறப்பான கேம் பினிஷர்

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா கடந்த 1988ல் சௌராஷ்டிராவின் நவகாமில் பிறந்தவர். தற்போது இந்திய அணியின் சிறப்பான கேம் பினிஷராகவும் இவர் உருவெடுத்துள்ளார். இதுவரை 49 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஜடேஜா 213 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஸ்பின்னர் ஆர் அஸ்வினைவிடவும் அதிக அளவில் சிறப்பான தன்னை நிரூபித்துள்ளார்.

உலக தரத்திலான பௌலர்

உலக தரத்திலான பௌலர்

அகமதாபாத்தில் 1993ல் பிறந்தவர் பும்ரா. இவரது பௌலிங் உலக தரத்திலானது. 20.33 இவரது பௌலிங் சராசரி. வெறும் 14 டெஸ்ட் போட்டிகளில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவரது எகானமி ரேட் முறையே 4.65 மற்றும் 6.66. கடந்த 2016ல் இவர் தனது முதல் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்காக அறிமுகமானார்.

ஒருநாள் தொடர்களில் சிறப்பு

ஒருநாள் தொடர்களில் சிறப்பு

இதேபோல இன்று பிறந்தநாள் காணும் ஷ்ரேயாஸ் ஐயர் 1994ல் மும்பையில் பிறந்தவர். ஒருநாள் போட்டிகளில் இவர் சிறப்பான அறிமுகம். இந்த வடிவத்தில் 44.83 இவரது சராசரியாக உள்ளது. ஒருநாள் தொடர்களில் 19 போட்டிகளில் விளையாடி 807 ரன்களை குவித்துள்ளார் ஐயர்.

Story first published: Sunday, December 6, 2020, 18:32 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+