இதுக்கெல்லாம் பதில் இருக்கா? வெற்றிக்கு பின்னும் இந்திய அணியை விளாசும் முன்னாள் வீரர்
மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில், 47 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.
இதை பலரும் வரவேற்று உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இந்திய அணியை வறுத்தெடுத்து இருக்கிறார்.
[கோலி, ரோஹித் தவிர மற்ற பேட்ஸ்மேன்களுக்கு இந்த போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா?]

அணி நிர்வாகம் போட்ட திட்டம்
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியை முதலில் அறிவித்தது. அதில் முக்கிய பந்துவீச்சாளர்களான பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அடுத்த நிலைக்கு நல்ல பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யவே இந்த முடிவை எடுத்தது அணி நிர்வாகம்.

இந்திய பந்துவீச்சு சொதப்பல்
எனினும், முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீசிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 6 ரன்களுக்கும் அதிகமாக ரன் கொடுத்தனர். இதையடுத்து இவர்களில் யாருக்கு அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பளிப்பார்கள் என்பது இனி வரும் போட்டிகளின் முடிவுகளை வைத்து தான் கூற முடியும்.

பேட்டிங் வாய்ப்பு கிடைக்கலையே
அதே போல, ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரும் விக்கெட் கீப்பர் தான் என்றாலும், தோனி விக்கெட் கீப்பிங் பணியை செய்ய, பண்ட் பேட்ஸ்மேனாக இருப்பார் என கூறப்பட்டது. எனினும், முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை. தோனி பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்குமா என பார்த்தால் அவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிஷன் சிங் பேடி கடும் விமர்சனம்
இதை விமர்சித்துள்ள பிஷன் சிங் பேடி, வலுவில்லாத வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்னும் மலையளவுக்கு கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என்பதை தவிர எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்திய அணிக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. உதாரணம் - இரண்டு கீப்பர்களோடு ஆடியும் எந்த முடிவுக்கும் இந்தியா வர முடியவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் உடன் ஆட வேண்டும் என்பது யாருடைய முடிவு? என கேட்டுள்ளார் பேடி. இவர் சொல்றதும் நியாயம் தான்.


Click it and Unblock the Notifications