For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோஹித் தவிர மற்ற பேட்ஸ்மேன்களுக்கு இந்த போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா?

விசாகப்பட்டினம் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட உள்ள உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிரெண்டு பேர் கொண்ட இந்த உத்தேச அணியில், முதல் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

முதல் போட்டியில் பேட்டிங்கில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் முழுதாக ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அது போல, பந்துவீச்சிலும் இந்தியா சரியாக செயல்படவில்லை.

பந்துவீச்சு முன்னேற வேண்டும்

பந்துவீச்சு முன்னேற வேண்டும்

முதல் போட்டியில் வென்று இருந்தாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். பந்துவீச்சில் முதல் போட்டியில் அனுபவ வீரரான ஜடேஜா அதிக ரன்கள் கொடுத்தார். வேகப்பந்துவீச்சில் ஷமி 81 ரன்கள், உமேஷ், கலீல் தலா 64 ரன்கள் கொடுத்தனர். சாஹல் மட்டுமே குறைவாக ரன்கள் கொடுத்தார். இரண்டாவது போட்டியில் பந்துவீச்சாளர்கள் சுதாரிக்க வேண்டும்.

பந்துவீச்சு சுமார்

பந்துவீச்சு சுமார்

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்களை குவித்தது. அந்த அளவிற்கு இந்திய பந்துவீச்சு சுமாராக இருந்தது.

நடுவரிசை பேட்டிங் செய்ய வாய்ப்பு வருமா?

நடுவரிசை பேட்டிங் செய்ய வாய்ப்பு வருமா?

அதே போல இந்தியாவின் நடுவரிசை பேட்டிங் மோசமாக இருக்கிறது, முதல் போட்டியில் நடுவரிசை வீரர்களான அம்பதி ராயுடு, தோனி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரை சோதிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ரோஹித், கோலி இருவரும் சேர்ந்தே கிட்டதட்ட 300 ரன்கள் குவித்துவிட்டனர். எனவே, 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அம்பதி ராயுடுவுக்கும் பெரிய அளவில் ரன் அடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்கள் விழும் பட்சத்தில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தங்களை நிரூபிக்க தயாராக இருக்க வேண்டும்.

பண்ட், தோனி என்ன செய்வார்கள்?

பண்ட், தோனி என்ன செய்வார்கள்?

ரிஷப் பண்ட் தன் முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். தற்போது விசாகப்பட்டினம் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் எப்படி பேட்டிங் செய்வார் என பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். அதே சமயம், பார்ம் அவுட்டில் இருக்கும் தோனியும், ஒரு அரைசதமோ, சதமோ அடித்துவிட மாட்டாரா? என ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். இந்த இரண்டாவது போட்டியில் அதற்கு வாய்ப்பு ஏற்படுமா என பார்க்கலாம்.

இந்திய அணி விவரம்

இரண்டாவது ஒருநாள் போட்டி உத்தேச 12 வீரர்கள் அணி - விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அஹ்மது.

Story first published: Tuesday, October 23, 2018, 16:50 [IST]
Other articles published on Oct 23, 2018
English summary
Indian Playing Eleven for 2nd ODI announced by BCCI - Indian team analysis for second ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X