Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு பேரு பேட்டிங்கா.. ஸ்டம்ப்புக்கு பின்னாடி சென்று பேட் செய்த இலங்கை வீரர்!

கொழும்பு: கொழும்பில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் வித்தியாசமான ஷாட் ஒன்றை அடிக்க முயற்சித்து இருக்கிறார். அந்த ஷாட் அடிக்க முயன்ற 'சமாரா சில்வா' இதன் மூலம் ஒரே நாளில் வைரல் ஆகி இருக்கிறார்.

இவர் பந்தை சாதாரணமாக அடிக்காமல் ஸ்டம்ப்புக்கு பின்பக்கம் போய் நின்று வித்தியாசமாக அடிக்க முயன்று இருக்கிறார். அவரின் இந்த முயற்சி கிரிக்கெட் உலகில் மிகவும் வித்தியாசமான ஷாட் என்று கூறப்படுகிறது.

சமாரா சில்வா இதற்கு முன்பே பல முறை வைரல் ஆன வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விஷயங்கள் காரணமாக இவர் கிரிக்கெட் உலகில் எப்போதும் பேசு பொருளாக இருந்து வருகிறார்.

வித்தியாசமான ஷாட்

கொழும்பில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் இலங்கையை சேர்ந்த சமாரா சில்வா என்ற வீரர் மிகவும் வித்தியாசமா ஷாட் ஒன்றை அடிக்க முயன்றார். ஸ்டம்ப்புக்கு பின்னே சென்ன்று இவர் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பவுலர் லாவகமாக பந்தை சரியாக ஸ்டம்ப்பை நோக்கி வீசி அவரை அவுட் செய்தார். தற்போது இது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

போட்டியில் டிவிஸ்ட்

இந்த நிலையில் இவர் இந்த வித்தியாசமான ஷாட் மூலம் ஆவுட் ஆகியும் கூட அவருக்கு விக்கெட் அளிக்கப்படவில்லை. இதையடுத்து பலரும் ஏன் அவருக்கு விக்கெட் கொடுக்கவில்லை என டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பால் 'ஃபிரி ஹிட்' பால் என்பது தெரிய வந்து இருக்கிறது. அதனால்தான் அவர் தைரியமாக அப்படி விளையாடி இருக்கிறார்.

நாங்களும் அப்பவே அப்படி

இந்த நிலையில் இதே போல் ஷாட் அடித்த இன்னொரு பிளேயரின் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் ஒரு பிளேயர் இதே போல் விளையாடி இருக்கிறார். கடைசி நொடியில் ஸ்டம்ப்புக்கு உள்ளே வந்து இவர் சரியாக பந்தை அடித்து பறக்க விட்டு இருக்கிறார்.

சர்ச்சைகளின் நாயகன்

சர்ச்சைகளின் நாயகன்

இலங்கையை சேர்ந்த சமாரா சில்வா இதற்கு முன்பே இதே போல் பல முறை சர்ச்சைகளில் சிக்கி வைரல் ஆகி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் இவரும், இவரது அணி வீரர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் வந்தது. தற்போது அன்று நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் ஐசிசி போட்டியில் கலந்து கொள்ள 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 22, 2017, 17:48 [IST]
Other articles published on Nov 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+