Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்ன குழந்தை கூட இந்த தவறு செய்யாது.. ரோகித் எடுத்த மட்டமான முடிவு.. தோனியின் மானமே போகுது

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு ரசிகர்களிடம் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

இதற்கு தகுந்தார் போல் இந்தியாவுக்கு வெற்றியும் கிடைத்தது. நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் கான்வே டக்அவுட் ஆகியும் வில் யங் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 19 ரன்களில் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது.

Bizarre decision from Rohit sharma to opt for DRS in NZ game

இதனை அடுத்து ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரல் மிச்சல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆட்டத்தில் 4.3 வது ஓவரில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு பும்ரா பந்து வீசினார். அப்போது ரவீந்திராவின் காலில் பந்து பட்டது. இதற்கு ரோகித் சர்மா அவுட் கேட்க நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார்.

ஏனென்றால் வெறும் கண்களில் பார்த்தாலே அந்த பந்து ஸ்டெம்பை மிஸ் ஆவது தெரிந்தது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் டிஆர்எஸ் முடிவை கேட்டார். அப்போது ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பில் படாமல் வெளியே சென்றது தெரியவந்தது. உடனே மூன்றாம் நடுவரும் இதனை அவுட் இல்லை என அறிவித்தார்.

இதனால் இந்தியாவின் ஒரு ரிவ்யூ வீணாக சென்றது. இதுபோல் வெறும் கண்ணில் பார்த்தாலே நாட் அவுட் எனத் தெரியும் விஷயத்திற்கு பொதுவாக எந்த கேப்டனும் ரிவ்யூ எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இடது கை பேட்ஸ்மேனுக்கு ஓவர் தி விக்கெட்டிலிருந்து பந்து வீசினால், அது ஸ்டம்பை மிஸ் செய்யும். இதனால் ஒரு ரிவ்யூ வீணாக போய்விடும் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்.

ஆனால் ரோகித் சர்மா அவசரப்பட்டு எடுத்த முடிவு இந்தியாவுக்கு பாதகமாக சென்றது. ரோஹித் இந்த முடிவு எடுத்த உடனே கிரிக்கெட் வர்ணனையில் இருந்த தினேஷ் கார்த்திக் தோனியின் ரிவ்யூ எடுக்கும் முறை போல் மற்ற எந்த கேப்டனும் செய்வதில்லை என்று பாராட்டினார். இதனை எடுத்து சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் ரோகித் சர்மாவை விமர்சனம் செய்தார்கள்.

Story first published: Sunday, October 22, 2023, 15:53 [IST]
Other articles published on Oct 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+