Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோ தோ நாய்க்குட்டி.. டீ பிரேக் விடுங்கப்பா.. விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் கலாட்டா!

விசாகப்பட்டனம்: ஒரு நாயால் டீ பிரேக் விடப்பட்ட கதையை எங்காச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா... விசாகப்பட்டனத்துல அது நடந்தேறி விட்டது பாஸ்!.

இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் இன்று விசாகப்பட்டனத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில்தான் ஒரு நாயால் களேபரபமாகி விட்டது.

அந்த நாயின் குறுக்கீடு காரணமாக டீ பிரேக் விட முடிவு செய்தனர் நடுவர்கள். அந்த அளவுக்கு நாயால் அலம்பலாகி விட்டது.

விசாகப்பட்டனம் டெஸ்ட்

விசாகப்பட்டனம் டெஸ்ட்

விசாகப்பட்டனத்தில் உள்ள ராஜேசகர் ரெட்டி ஸ்டேடியத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. 56.2வது ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திரு்நத நிலையில், வேகப் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச தயாரானார். பந்தை எதிர்கொள்ள விராத் கோஹ்லி தயாராக இருந்தார்.

சூ சூ

சூ சூ

அப்போது ஒரு நாய் உள்ளே புகுந்து விட்டது. இதனால் பிராட் பந்து வீசுவதை நிறுத்தினார். நடுவர் தர்மசேனாவுக்கு அருகே வரை வந்து விட்டது அந்த நாய். பிராட், அந்த நாயை விரட்டப் பார்த்தார். ஆனால் அது போகவில்லை.

செருப்பை எடுத்து விரட்டிய ஊழியர்கள்

செருப்பை எடுத்து விரட்டிய ஊழியர்கள்

இந்த நிலையில் இரண்டு ஸ்டேடிய ஊழியர்கள் வந்து நாயை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அது மறுபடியும் மறுபடியும் உள்ளேயே வந்தது. அதில் ஒருவர் ஷூவைக் கழற்றி நாயை மிரட்டியும் பார்த்தார். ஆனால் அது போவதும் வருவதுமாக இருந்தது.

இது ஆவுறதுக்கில்லை

இது ஆவுறதுக்கில்லை

இதைப் பார்த்த நடுவர்கள் தர்மசேனா மற்றும் ராட் டக்கர் ஆகியோர் டீ பிரேக்கை முன்கூட்டியே விடுவதாக அறிவித்து இடத்தைக் காலி செய்தனர்.

Story first published: Thursday, November 17, 2016, 14:53 [IST]
Other articles published on Nov 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+