Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிந்து, சாக்ஷி, தீபாவுக்கு பிஎம்டபுள்யூ கொடுத்த சச்சின்: காருக்கு காசு கொடுத்தது யார் தெரியுமா?

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த பி. வி. சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் வழங்கிய பி.எம்.டபுள்யூ. கார்களுக்கு பணம் கொடுத்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் மற்றும் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

BMWs for Olympic Champions: Do you know Sachin did not pay for the cars?

இந்த நிகழ்ச்சியில் சிந்து, சாக்ஷி, தீபா மற்றும் கோபிசந்த் ஆகியோருக்கு பி.எம்.டபுள்.யூ. சொகுசு கார்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். அவர் கார்களின் சாவிகளை மட்டுமே அளித்தார். உண்மையில் அந்த கார்களை பணம் கொடுத்து வாங்கி அவர்களுக்கு கொடுத்தது தொழில் அதிபர் வி. சாமுண்டேஷ்வர்நாத்.

சாமுண்டேஷ்வர்நாத் ஹைதராபாத் பேட்மின்டன் அசோசியேஷனின் தலைவர் ஆவார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர் சச்சினின் நெருங்கிய நண்பர். அதனால் தான் தனது நண்பர் சச்சின் கையால் கார்களை வீராங்கனைகளுக்கு வழங்க வைத்துள்ளார்.

முன்னதாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு சாமுண்டேஷ்வர்நாத் கார்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 30, 2016, 9:40 [IST]
Other articles published on Aug 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+