மும்பை : சிஎஸ்கே அணி ஐபிஎல் 2021 தொடருக்காக சிறப்பாக தயாராகி வந்தாலும் அணியில் கொண்டாட்டத்திற்கும் குறைவில்லாமல் உள்ளது.
அணி வீரர்கள் இணைந்து கோச் பிளமிங்கின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தோனி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கொண்டாட்டத்தில் ரெய்னாவை கட்டித்தழுவி பிளமிங் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் 2021 தொடருக்காக மும்பையில் முகாமிட்டுள்ளது சிஎஸ்கே அணி. அந்த அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் மற்றும் கேப்டன் தோனியின் கீழ் சிறப்பான பயிற்சிகளை பெற்று வருகிறது. ஆயினும் அணியில் கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாமல் உள்ளது. கோச் பிளமிங்கின் பிறந்தநாளை அணி வீரர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
Bonds beyond boundaries!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2021
Siripu Enipu and a lot of #Yellove to you Coach @SPFleming7 . #WhistlePodu #SavourTheMoment pic.twitter.com/lUaYp0M2kH
இந்த கொண்டாட்டத்தில் தோனியும் பங்கேற்றுள்ளார். கொண்டாட்டத்தின்போது ரெய்னாவை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை பிளமிங் வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில் நெகிழ்ச்சியான தருணங்களை கொண்டிருந்தது இந்த கொண்டாட்டம். இந்த கொண்டாட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே பகிர்ந்துள்ளது.