Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித், கோலியுடன் மேட்ச் பிக்ஸிங் புக்கி.. புகைப்பட ஆதாரம் வெளியானது

Recommended Video

சூதாட்ட புக்கியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கோஹ்லி , ரோஹித்

மும்பை : பிரபல தொலைக்காட்சி நிறுவனமான அல்-ஜசீரா கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தொடர்ந்து ஆவணப் படங்கள், செய்திகள் வெளியிட்டு வருகிறது.

தற்போது அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த ஸ்பாட் பிக்ஸிங் பற்றி ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கோலியுடன் ஒரு மேட்ச் பிக்ஸிங் புக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டது ஆதாரத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15 போட்டிகளில் பிக்ஸிங்

15 போட்டிகளில் பிக்ஸிங்

அல்-ஜசீரா வெளியிட்ட ஆவணப்படத்தில் 2011-12 காலகட்டத்தில் 15 போட்டிகளில் 26 ஸ்பாட் பிக்ஸிங் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் ஆறு டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் அடங்கும்.

எந்த நாட்டு வீரர்கள்?

எந்த நாட்டு வீரர்கள்?

இதில் மேலும், இங்கிலாந்தை சேர்ந்த சில வீரர்கள் 7 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் வீரர்கள் 3 போட்டிகளிலும், மற்ற நாடுகளின் வீரர்கள் ஒரு போட்டியிலும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வீரர்களுடன் புகைப்படம்

வீரர்களுடன் புகைப்படம்

மேட்ச் பிக்ஸிங் செய்யும் புக்கியான முனாவர் என்பவரை பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் முனாவர் பல கிரிக்கெட் வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோருடன் முனாவர் நிற்பது போன்ற புகைப்படங்களை அல்-ஜசீரா வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கையில் நடந்த 2012 டி20 உலகக்கோப்பை தொடரின் போது பல சர்வதேச வீரர்களோடு முனாவர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித், கோலி தவறு செய்யவில்லை

ரோஹித், கோலி தவறு செய்யவில்லை

அல்-ஜசீரா இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரோஹித், கோலியுடன் முனாவர் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் "இந்த புகைப்படத்தில் இருக்கும் வீரர் தவறு செய்தார் என கூறவில்லை" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் என்றால் சூதாட்டமா?

கிரிக்கெட் என்றால் சூதாட்டமா?

கிரிக்கெட் என்றாலே சூதாட்டம் தான் என சிலர் கூறி வரும் நிலையில், இது போன்ற ஆதாரங்கள் மற்றும் ஆவணப்படங்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளது போல இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் யாரும் ஈடுபடவில்லை என அந்த நாட்டு கிரிக்கெட் போர்டுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.

Story first published: Monday, October 22, 2018, 17:41 [IST]
Other articles published on Oct 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+