Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்டர் கவாஸ்கர்- ஹர்திக் பாண்டியா இடத்திற்கு சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஆல் ரவுண்டர்.. இந்திய அணி முடிவு

மும்பை : 2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக கருதப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தான். ஆஸ்திரேலிய அணி இந்த கோப்பையை வென்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் தயாராகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை பெற வேண்டுமென்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.இதனால் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய பொறுப்பில் ஒவ்வொரு கேப்டனும் இருக்கின்றார்கள். அதே வகையில் பேட்டிங்கும் ஆழமாக இருந்தால் அது ரன்குவிப்புக்கும் சாதகமாக இருக்கும்.

ind vs nz kl rahul rohit sharma sarfaraz khan

இதனால் தான் பேட் கம்மின்ஸ் இரண்டு ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன்களை பிளேயிங் லெவனில் சேர்க்க திட்டமிட்டு இருந்தார்கள். அதில் கேமரன் கிரீனுக்கு தற்போது காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் தான் விளையாடுவார். இந்த சூழலில் இந்திய அணியை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலை இருக்கின்றது.

ஹர்திக் பாண்டியா தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை ரஞ்சி கோப்பையில் முதலில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இதனால் இந்திய அணி ஹர்திக் பாண்டியா இடத்திற்கு வேறு ஒரு ஆல் ரவுண்டரை பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது. அந்த வகையில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரையும், சன்ரைசர்ஸ் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டியும் ஆஸ்திரேலியா தொடருக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே நிதிஷ் ரெட்டி இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார். இதில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை தேர்வு குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதேபோன்று 33 வயதான அனுபவம் வாய்ந்த சர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியாவுக்கு சரியான மாற்றுவீராக இருப்பார். இவர் ஏற்கனவே பார்டர் காவாஸ்கள் தொடரில் விளையாடி இருக்கிறார்.

எனினும் இந்தியாவுக்காக இவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் டெஸ்ட் தொடரில் விளையாடினார். பேட்டிங்கில் ரன் அடிப்பதிலும் பௌலிங்கில் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உடைப்பதிலும் வல்லவராக இருக்கின்றார். இதனால் இந்த இரண்டு வீரர்களின் ஒருவர் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

Story first published: Wednesday, October 23, 2024, 16:47 [IST]
Other articles published on Oct 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+