Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்டர் கவாஸ்கர் தொடர்- இந்திய அணியில் சர்ஃபராஸ் கான்,ஸ்ரேயாஸ், புஜாரா, ரஹானே ஆகியோர் அதிரடி நீக்கம்

மெல்போர்ன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி 4 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக ருதுராஜ் தலைமையிலான இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று பயிற்சி ஆட்டங்களில் பங்கு பெற இருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி மற்றும் நவம்பர் 7ஆம் தேதி மற்றும் நவம்பர் 15 ஆம் தேதி என மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது.

ind vs nz ruturaj rohit sharma sarfaraz khan

இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் உள்ள முன்னணி வீரர்கள் காயம் அடைந்தாலும் இல்லை ஃபார்ம் அவுட் ஆனாலோ மாற்று வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் அடித்த புஜாரா உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் ரகானே ஆகியோர் இந்திய ஏ அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ் காணும் ஆஸ்திரேலியா தொடரில் பயிற்சி பெறுவதற்காக இந்திய ஏ அணியில் இடம் பிடிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் நட்சத்திர வீரர்கள் என யாருமே சேர்க்கப்படவில்லை. ஒரு காலத்தில் இந்திய அணி வெளிநாட்டுக்கு செல்லும் போதெல்லாம் இந்திய ஏ அணியில் டிராவிட், லக்ஷ்மன் போன்ற அனுபவ வீரர்களை பிசிசிஐ அனுப்பும்.

இதன்மூலம் அங்கு பயிற்சி போட்டிகளில் விளையாடி அவர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்து கொள்வார்கள். அந்த வகையில் சர்பராஸ் கான், கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களை பிசிசிஐ இந்திய ஏ அணியுடன் அனுப்பி பயிற்சி செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி இந்த வாய்ப்பை வீணடித்து விட்டது.

எனினும் இந்திய டெஸ்ட் அணியில் மாற்று தொடக்க வீரராக இடம்பெற வாய்ப்பு இருக்கும் ருதுராஜ், அபிமன்யூ ஈஸ்வரன்,சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் ரோகித் சர்மா, பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதில் ருதுராஜ் அல்லது ஈஸ்வரன் என இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

Story first published: Monday, October 21, 2024, 23:31 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+