மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகி தோல்வியை தழுவி இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணி வரும் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் இந்தியாவில் சாதிக்குமா? இல்லை மண்ணைக் கவ்வுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சொந்த மண்ணில் நியூசிலாந்து இடமே தோல்வியை தர இருப்பதால் ஆஸ்திரேலியாவில் இந்தியா சாதிக்க வாய்ப்பே இல்லை என்று கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலிய மண்ணில் நாம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன்.
கடந்து இரண்டு தொடர்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.
எனவே அதை மனநிலையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணுக்கு இந்திய அணி செல்லும். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அதிகளவு விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய அனுபவம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.இளம் தலைமுறையினரும் நல்ல நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார்கள்.
தங்களுடைய திறமையை அவர்கள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ரன் குவிப்பது என்பது அவர்களுக்கு நிச்சயம் சாதகமான விஷயமாகவே இருக்கும்.அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் வேகம் என்பது ஒரு சவாலாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நமது வீரர்கள் தயாராகிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இதேபோன்று 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கின்றது. நாம் ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றோம். பயிற்சியாளர் கம்பீர் கேப்டன் ரோகித் சர்மா கூட்டணியில் இந்திய அணியில் திறமை வாய்ந்த சீனியர்கள், இளைஞர்கள் கலந்த வகையில் இருக்கிறார்கள் இதனால் சாம்பியன்ஸ் கோப்பையையும் இந்தியா வெல்லும் இன்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.