இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் பிளான்.. 35 வயது வீரருக்கு திடீர் வாய்ப்பு.. பின்னணி என்ன?
சிட்னி: 2027 ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்துவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இப்போதே தங்களது மாஸ்டர் பிளானை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 35 வயதான சீனியர் பேட்டர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆஸ்திரேலிய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இந்தியா ஏ அணிக்கு எதிராக 2 நான்கு நாள் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் புதுச்சேரியில் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளன. இந்திய ஆடுகளங்களின் தன்மையை ஆஸ்திரேலிய இளம் வீரர்களும், டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள ஆஸ்திரேலிய வீரர்களும் புரிந்து கொள்வதற்காக இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய ஏ அணியில் 35 வயதான பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் இடம் பெற்றுள்ள மிக மூத்த வீரர் ஆவார். இவர்களுடன் ஜே ரிச்சர்ட்சன், பிரெண்டன் டாக்ஜெட் மற்றும் டாட் மர்பி போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். கடைசியாக 2023 ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் , கடந்த உள்நாட்டு ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் 34.47 சராசரியுடன் 724 ரன்கள் குவித்து இருந்தார்.
ஒற்றை கையில் மிரட்டல் கேட்ச் பிடித்துவிட்டு நம்பவே முடியாமல் நின்ற கிளென் பிலிப்ஸ்.. ஏமாந்த நரைன்
இது குறித்து ஆஸ்திரேலிய தேர்வு குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், "இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை எதிர்கொள்ள இந்த சுற்றுப்பயணம் வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். அடுத்த ஆண்டு இந்திய டெஸ்ட் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய இந்த போட்டிகளின் செயல்பாடு முக்கியமாக அமையும்" என்றார். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய இலக்காக இருப்பதால் இந்த சுற்றுப்பயணம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
