Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடியவர்..! முக்கிய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம்..!

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாராக பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 2 சீசன்களாக கேன் வில்லியம்சனின் தலைமையில் சிறப்பாக ஆடிவருகிறது. 2018ம் ஆண்டு சீசனில் பைனலில் தல தோனியின் சிஎஸ்கேவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2019ம் ஆண்டு சீசனில் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடல்சிடம் தோற்று வெளியேறியது. ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது.

வெற்றி அணிகள்

வெற்றி அணிகள்

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஸ்கே ஆகியவை வெற்றிகர அணிகளாக வலம் வருகின்றன. அவற்றிற்கு அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் திகழ்கின்றன.

புதிய கோச் நியமனம்

புதிய கோச் நியமனம்

இந்நிலையில், அணிக்கு புது உத்வேகம் கொடுக்க நினைத்த சன்ரைசர்ஸ் அணி, டாம் மூடியை நீக்கியது. அவருக்கு பதிலாக, டிரெவர் பேலிஸ் புதிய தலைமை பயிற்சியாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார்.

துணை பயிற்சியாளர் ஹேடின்

துணை பயிற்சியாளர் ஹேடின்

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹேடின் நியமிக்கப்பட்டுள்ளார். பிராட் ஹேடின் ஐபிஎல்லில் 2011ம் ஆண்டு சீசனில் மட்டும்தான் ஆடினார். அந்த சீசனில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் எந்த போட்டியிலும் அவர் ஆடவில்லை.

அசாத்திய அனுபவம்

அசாத்திய அனுபவம்

ஹேடின், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ள டிரெவர் பேலிசுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஹேடின் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணி 2012ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கை வென்றது.

கூடுதல் பலம்

கூடுதல் பலம்

அப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர் பேலிஸ். இருவரும் தற்போது மீண்டும் இணைந்து சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளர்களாக ஆக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பலமாகும்.

Story first published: Tuesday, August 20, 2019, 13:40 [IST]
Other articles published on Aug 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+