10 வருஷம் ஆச்சு.. ஐபிஎல் சம்பளம் இன்னும் வரல.. பரபரப்பை கிளப்பியுள்ள பிராட் ஹாட்ஜ்!
ஆஸ்திரேலியா: ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்பிவிட்டுள்ளார் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ்.
Recommended Video
2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் உலக டி20 போட்டித் தொடரில் இந்தியா 2ம் இடம் பிடித்தது. இதற்கான பரிசுத் தொகை இன்னும் இந்திய வீராங்கனைகளுக்கு சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து பிசிசிஐ அது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்த செய்தி பிரிட்டன் செய்தி ஊடகம் ஒன்றில் வெளியாக, முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் தனக்கும் இன்னும் 2011 ஐபிஎல் ஊதியம் நிலுவையில் உள்ளது என்றும் பிசிசிஐ அதை பெற்றுத்தர முடியுமா என்றும் கேட்டுள்ளார்.

ஐபிஎல் 2010
2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேரள மாநிலம் சார்பாக கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி அறிமுகப்படுத்தப்பட்டது. டிராவிட், ஜெயவர்தனே, ஸ்ரீ சாந்த், பிராட் ஹாட்ஜ் உள்ளிட்டோர் இடம் பெற்ற அந்த அணி தொடரில் 6 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் 8ம் இடம் பிடித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அந்த அணி ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டது.

கொச்சி டஸ்கர்ஸ்
வங்கி உத்தரவாத தொகையாக ரூ.155 கோடியை அந்த அணி அளிக்க தவறியதால் அந்த அணியை பிசிசிஐ நீக்கியது. இதனையடுத்து அந்த அணி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கில் கேரள அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ. 550 கோடியை நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலுவை
இந்நிலையில், இதுகுறித்து அந்த அணியில் விளையாடிய பிராட் ஹாட்ஜ் முறையிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஆடிய வீரர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் 35% தொகை வந்து சேரவில்லை. பிசிசிஐ அந்தப் பணத்தை பெற்று தர முடியுமா? என்று கேட்டுள்ளார்.

ஹாட்ஜ்
46 வயதாகும் பிராட் ஹாட்ஜ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 285 ரன்களை குவித்தார். அதில் அவரின் சராசரி ரன் ரேட் 35.63 ஆக இருந்தது. அதன்பின்னர் பிராட் ஹாட்ஜ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications