Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரோகித் கதை இனி க்ளோஸ்..” அடுத்தடுத்த பிரச்சினைகள் உள்ளன.. ஆஸி, முன்னாள் வீரர் எச்சரிக்கை

மும்பை: ரோகித் சர்மாவுக்கு இனி தொடர்ந்து கஷ்டமான காலமாகவே தான் இருக்கப் போகிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, தனி கவனம் ஈர்த்து வருகிறார்.

நியூசிலாந்து தொடர் முதல், இலங்கை தொடர் வரை அடுத்துடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

ரசிகர்கள் யோசனை

ரசிகர்கள் யோசனை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மட்டும் ரோகித் சர்மாவால் பங்குபெற முடியவில்லை. இதனால் மோசமான முறையில் இந்தியா தோல்வியை சந்தித்தது. எனினும் ரோகித் கேப்டன்சி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். சிரித்துக்கொண்டே வீரர்களிடம் பேசுவது, களத்தில் அமைதிகாப்பது போன்றவைகள் கோலியை விட ரோகித் சிறந்தவர் என்ற யோசனையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.

பிராட் ஹாக்கின் எச்சரிக்கை

பிராட் ஹாக்கின் எச்சரிக்கை

இந்நிலையில் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என பிராட் ஹாக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி, உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

ரோகித்துக்கு தலைவலி

ரோகித்துக்கு தலைவலி

இது நிச்சயம் ரோஹித் ஷர்மாவுக்கு கடினமான போட்டியாக இருக்கும். அவர் அழுத்தத்தில் இருக்கப்போவதை காண காத்திருக்கிறேன். அவர் அந்ந சமயத்தில் வழக்கம்போல அமைதியாக இருப்பாரா? இல்லை கோபத்தில் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதனை முடித்துவிட்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணம்,டி20 உலகக் கோப்பை என அடுத்து முக்கிய போட்டிகள் உள்ளன.

ஆவலுடன் காத்திருப்பு

ஆவலுடன் காத்திருப்பு

இந்த போட்டிகள் அனைத்துமே ரோகித் சர்மாவுக்கு அழுத்தங்களை உண்டாக்கும்.

அவர் கடும் அழுத்தத்தில் இருக்கப் போகிறார். அந்த சமயத்தில், அமைதியாக இருப்பாரா? இல்லை கோபத்தில் இருப்பாரா? என்பதை பார்க்க நான் ஆவலுடன் காத்துள்ளேன். ஆனால் நிச்சயம் நான் கூறியது நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்..

வல்லுநர்கள் கணிப்பு

வல்லுநர்கள் கணிப்பு

சர்வதேச அளவில் வெற்றிகரமான கேப்டனாக மாறியுள்ள ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுக் கொடுத்துள்ளார். இப்படி உள்நாட்டு தொடர், சர்வதேச தொடர் என அடுத்தடுத்து வரும் போட்டிகளால், அவர் ஏதேனும் ஒரு ஃபார்மட்டில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வல்லுநர்கள் கோரியுள்ளனர்.

Story first published: Saturday, March 19, 2022, 16:49 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+