Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ வீசிய "மேஜிக்" பந்து.. "ரிவ்யூ வேண்டாம்"-னு சொல்லி.. உடனே வெளியேறிய கேன் வில்லியம்சன்

ஷார்ஜா: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில், பிராவோ வீசிய மேஜிக் பந்தில் கேன் வில்லியம்சன் அவுட்டாகி வெளியேறினார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.30) ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்ய, ஹைதராபாத் தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

 பிராவோ இன்

பிராவோ இன்

சென்னை அணியில், சாம் கர்ரனுக்கு பதில் பிராவோ மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த போட்டியில் காயம் காரணமாக பிராவோ விலகியிருக்க, சாம் கர்ரன் விளையாடினார். ஆனால், அந்த போட்டியில் சாம் ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில், இன்றைய போட்டியில், பிராவோ மீண்டும் அணிக்கு திரும்பினார். சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (w/c), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 கடைசி இடம்

கடைசி இடம்

அதேசமயம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய், ரிதிமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்கு நேர்மாறாக, 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 ஏமாந்த வில்லியம்சன்

ஏமாந்த வில்லியம்சன்

இந்நிலையில், பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் சாஹா, சாஹர் வீசிய மூன்றாவது ஓவரில், 2 மெகா சிக்ஸர்களை சாஹா பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரர் ஜேஸன் ராய் பொறுமையாக இன்னிங்ஸை தொடங்கினார். இந்நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இதில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில், எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேஸன் ராய். இதனால், ஹைதராபாத் தனது முதல் மற்றும் முக்கிய விக்கெட்டை இழந்தது. இதன் பிறகு கேப்டன் கேன் வில்லயம்சன் களமிறங்கினார். 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன், பிராவோ ஓவரில் அவுட்டானார் என்று சொல்வதை விட ஏமாந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 ரிவ்யூவுக்கு மறுப்பு

ரிவ்யூவுக்கு மறுப்பு

6.3வது பந்தில் ஆஃப் சைடில் மிக மோசமான, கேலிக்குரிய வகையில் வைட் பந்து ஒன்றை பிராவோ வீசினார். அந்த பந்துக்கு நோ-பால் கூட கொடுத்திருக்கலாம். அந்தளவுக்கு மோசமான வைட் பந்து. ஆனால், அம்பயர் வைட் மட்டுமே கொடுத்தார். அதற்கு அடுத்த பந்தை மெதுவாக 129 கி.மீ வேகத்தில் யார்க்கராக பிராவோ வீச, அவ்வளவு பொறுமையான பந்தை வில்லியம்சன் எதிர்பார்க்கவில்லை. பந்து நேராக அவரது பேடில் பட, அம்பயர் எந்தவித யோசனையும் இன்று அவுட் கொடுத்துவிட்டார். இதனால், ரிவ்யூ எடுக்கலாம் என்று சாஹா ஆலோசனை கொடுக்க, அதனை கேன் மறுத்துவிட்டார். ரிவ்யூ எடுத்தால் நிச்சயம் அது வீணாய் போகும் என்பதை உணர்ந்த வில்லியம்சன் அதனை தவிர்த்துவிட்டார். இதற்கு தான் பிராவோ அணிக்கு தேவை!

Story first published: Thursday, September 30, 2021, 20:53 [IST]
Other articles published on Sep 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+