Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

23 ஆண்டு கால சாதனையை உடைத்த ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர்.. ஆன்டி பிளவர் ரெக்கார்டு முறியடிப்பு

அபுதாபி: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான பிரெண்டன் டெய்லர், ஒருநாள் கிரிக்கெட்டில் 23 ஆண்டு ரெக்கார்டை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வங்கதேச அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், 23 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் நீடித்த ஜாம்பவான் ஆன்டி பிளவரின் சாதனையை இவர் தகர்த்து எறிந்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தேசிய அணிக்குள் நுழைந்த 40 வயதான பிரெண்டன் டெய்லர், 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். ஜிம்பாப்வே அணி தொடக்கத்திலேயே 7 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பெரும் சரிவைச் சந்தித்தது. இந்த இக்கட்டான சூழலில் ஆன்டி பிளவரின் சாதனையை முறியடிக்க டெய்லருக்கு 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மொசாடக் ஹொசைன் வீசிய 16-வது ஓவரின் 5-வது பந்தில் அந்த 31-வது ரன்னை அடித்து புதிய வரலாறு படைத்தார். நிதானமாக ஆடிய அவர் 101 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார்.

Brendan Taylor Breaks Andy Flower s 23-Year Record to Become Zimbabwe s Leading ODI Run-Scorer

ஜிம்பாப்வேயின் ஆகச்சிறந்த வீரரான ஆன்டி பிளவர் 1992 முதல் 2003 வரை 213 போட்டிகளில் ஆடி 6,786 ரன்கள் சேர்த்திருந்தார். 2004-ல் அறிமுகமான டெய்லர், தற்போது 211 போட்டிகளில் 209 இன்னிங்ஸ்களில் விளையாடி 6,837 ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது கணக்கில் 11 சதங்களும், 40 அரைசதங்களும் உள்ளன. 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேயை வழிநடத்திய இவர், 40 வயதிலும் இந்த சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் கிராண்ட் பிளவர் 6,571 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

"கோப்பை வெல்வது மட்டுமே வெற்றி கிடையாது".. இந்திய மண்ணில் வரலாறு படைக்கத் தவறிய ஹோப் உருக்கம்

இந்தப் போட்டியில் அனுபவ வீரர் கிரேக் எர்வினுடன் கைகோர்த்த டெய்லர் 4-வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து அணியைக் காப்பாற்றினார். எர்வின் 93 ரன்கள் எடுக்க, சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 271 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே தனது அடுத்த ஆட்டத்தில் வரும் அக்டோபர் 19 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அபுதாபி ஷேக் சையத் மைதானத்தில் நடக்கும் அந்தப் போட்டியில் வென்றால் ஜிம்பாப்வே தனது இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யும்.

Story first published: Sunday, October 18, 2026, 9:43 [IST]
Other articles published on Oct 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+