Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கல் 2 மாங்காய்.. ஷாரூக் கான் தந்த செம ஆஃபர்.. பேட்டை தூக்கிப் போட்டு ஓடி வந்த அதிரடி மன்னன்!

கொல்கத்தா : ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்குல்லம்-ஐ நியமித்துள்ளது.

ஈரோ டி20 ஸ்லாம் எனும் டி20 தொடரில் பங்கேற்க இருந்த மெக்குல்லம் அதை தூக்கிப் போட்டு விட்டு கொல்கத்தா அணி பயிற்சியாளர் பதவிக்கு ஓடி வந்துள்ளார்.

செம டீல்

செம டீல்

இதன் பின்னணியில் சுவாரசியமான "டீல்" ஒன்று இருக்கிறது. கொல்கத்தா அணியை நிர்வகித்து வரும் ஷாரூக்கான் - ஜுஹி சாவ்லா கொடுத்த ஆஃபரை மறுக்க முடியாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, பயிற்சியாளர் பதவியை பெற்றுள்ளார் மெக்குல்லம்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

கடந்த வாரம் கனடாவின் க்ளோபல் டி20 தொடரில் ஆடி வந்த பிரென்டன் மெக்குல்லம் திடீரென ஒட்டு மொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அடுத்து நடக்க இருந்த ஈரோ டி20 ஸ்லாம் தொடரில் இருந்தும் பின் வாங்கினார்.

டி20 தொடர்கள்

டி20 தொடர்கள்

முன்னதாக அவர் நியூசிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். அதன் பின் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் ஒன்று விடாமல் உலகம் முழுவதும் சுற்றி, சுற்றி ஆடினார். அதையே முழு நேரமாக செய்து வந்த மெக்குல்லம், வயதான காரணத்தினால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

திடீர் ஓய்வு

திடீர் ஓய்வு

ஐபிஎல்-க்கு அடுத்த பெரிய தொடராக பிக் பாஷ் லீக்கில் இருந்தும் இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில், பிற டி20 தொடர்களில் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவித்துள்ளார். எனினும், அவர் ஓய்வு பெறும் முடிவில் இல்லை. அதனால் தான் ஈரோ டி20 ஸ்லாம் எனும் புதிய டி20 தொடரில் பங்கேற்க ஒப்புக் கொண்டார்.

உதவி பயிற்சியாளர்

உதவி பயிற்சியாளர்

முதலில் மெக்குல்லம் கொல்கத்தா அணிக்கு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியானது. உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் தலைமை பயிற்சியாளராகவும், மெக்குல்லம் உதவி பயிற்சியாளராகவும் நியமிக்க உள்ளதாக செய்திகள் வந்தன.

குறுக்கே வந்த சன்ரைசர்ஸ்

குறுக்கே வந்த சன்ரைசர்ஸ்

ஆனால், சன்ரைசர்ஸ் அணி ட்ரெவர் பேலிஸ்-ஐ தட்டிச் சென்றது. இந்த நிலையில் வேறு தலைமை பயிற்சியாளரை டேர்சு செய்வதற்கு பதில் மெக்குல்லம்-ஐ நியமித்தால் என்ன என்ற முடிவுக்கு வந்த நிர்வாகம், அவருக்கு செம ஆஃபர் ஒன்றை கூறி உள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் அணி

கரீபியன் பிரீமியர் லீக் அணி

கரீபியன் பிரீமியர் லீக்கில், இதே ஷாரூக் கான் - ஜுஹி சாவ்லா குழுமம் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்ற அணியை வைத்துள்ளது. அந்த அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தலைமை பயிற்சியாளர் பதவியை கொடுக்க முன் வந்தது நிர்வாகம்.

வாய்ப்பு

வாய்ப்பு

இது வரை பயிற்சியாளர் பணியை செய்து இராத மெக்குல்லம்-க்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. அதனால், மற்ற டி20 தொடர்களை கைகழுவி விட்டு நேரடியாக பயிற்சியாளர் பதவிக்கு வந்து விட்டார் மெக்குல்லம்.

கொல்கத்தா - மெக்குல்லம் பாசம்

கொல்கத்தா - மெக்குல்லம் பாசம்

கொல்கத்தா - மெக்குல்லம் பாசமும் தனித்துவமானது. 2008 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடிய மெக்குல்லம் அதிரடி சதம் அடித்து தொடரை துவக்கி வைத்தார். அது தான் இன்றைய ஐபிஎல் தொடரின் பெரிய வெற்றிக்கான முதல் அதிரடி ஆட்டம். அது தற்போது இரண்டு தலைமை பயிற்சியாளர் பதவியை மெக்குல்லம்-க்கு வாரிக் கொடுக்கும் அளவுக்கு வந்துள்ளது.

Story first published: Thursday, August 15, 2019, 17:49 [IST]
Other articles published on Aug 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+