For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய சிறுமியோட விளையாடுனதுல நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் -பிரெட் லீ

மெல்போர்ன் : முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, 6 வயது தானிஷா சென் என்ற இந்திய சிறுமிக்கு பந்துவீசினார். சிறிய வயதிலேயே அவரது ஆர்வத்தையும் திறமையையும் கண்டு வியப்படைந்தார்.

அந்த சிறுமி சிறிய வயதில் சச்சின் டெண்டுல்கரை பார்ப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும், அவரது பேட்டிங் ஸ்டைல் தன்னை பதற்றப்பட செய்ததாகவும் நம்பமுடியாத அளவில் இருந்ததாகவும் பிரெட் லீ தெரிவித்தார்.

Brett Lee Compares Six-Year-Old Girl To Sachin Tendulkar

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு 6 வயதிலேயே சிறப்பாக விளையாடிவரும் தானிஷா சென், தனக்கு கவர் டிரைவ் ஆடுவது மிகவும் பிடிக்கும் என்றும் மகளிர் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவின் ஆட்டம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 6 வயது தானிஷா சென் என்ற சிறுமி தன்னுடைய பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இதுமட்டுமின்றி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீயையும் அந்த சிறுமி வெகுவாக கவர்ந்துள்ளார்.

6 வயது தானிஷா சென்னிற்கு சில பந்துகளை வீசிய பிரெட் லீ, அந்த சிறுமியின் வேகம் தனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும், சிறுவயது சச்சின் டெண்டுல்கரை நினைவு படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பேட்டிங் ஸ்டைல் நம்பமுடியாத அளவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை டி20 உலக கோப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் பிரெட் லீ, சிறுமிக்கு பந்துவீசுவதையும், அவர்கள் இருவரையும் பிரபல ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிருபர் நெரோலி மெடோஸ் பேட்டி காண்பதும் காணப்படுகிறது. அந்த சிறுமியை எதிர்கால நட்சத்திரம் என்று வீடியோவில் நெரோலி புகழ்ந்துள்ளார்.

அந்த சிறுமியை பேட்டி கண்ட நெரோலி, அவருக்கு பிடித்தமான ஷாட் குறித்த கேள்வியை கேட்க, அதற்கு கவர் டிரைவ் தான் தனக்கு பிடிக்கும் என்று அந்த சிறுமி கூறியுள்ளார். மேலும் இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தன்னுடைய மனம்கவர்ந்த வீராங்கனை என்றும் தானிஷா சென் தெரிவித்தார்.

இதனிடையே, அந்த சிறுமி இந்தியாவிற்காக விளையாடும் நாளுக்காக தான் காத்திருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்திய மகளிர் கவனத்தை பெற்று வருகின்றனர். தற்போது விளையாடிவரும் ஐசிசி மகளிர் டி20 தொடரில் இறுதிப்போட்டியை அவர்கள் எட்டியுள்ளனர். நாளை மறுநாள் மெல்போர்னில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் எதிர்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் தானிஷா சென்னின் திறமை, தயாராகிவரும் அடுத்த தலைமுறையை எடுத்துக் காட்டுகிறது.

Story first published: Friday, March 6, 2020, 18:16 [IST]
Other articles published on Mar 6, 2020
English summary
Lee compared the young girl to India batting great Sachin Tendulkar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+