டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் பெரும் குறை.. பிசிசிஐ இதை யோசிக்கலையே.. பிரட் லீ முக்கிய அட்வைஸ்!
மும்பை: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பெரும் தவறு நடந்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார்.
இன்னும் 5 நாட்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது.
இதற்காக ஆஸ்திரேலியாவுக்கு முன்கூட்டியே சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

டி20 உலகக்கோப்பை அணி
கடந்தாண்டு மிக மோசமாக சொதப்பிய இந்திய அணி இந்தாண்டு அசுர பலத்தில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் என அனைவருமே நல்ல ஃபார்மில் களமிறங்குகின்றனர். ஆனால் பந்துவீச்சு தான் ஜடேஜா மற்றும் பும்ரா இல்லாமல் பின்னடைவை சந்தித்துள்ளது. மாற்று வீரரை கூட பிசிசிஐ இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

பும்ராவின் மாற்று
முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் மாற்று வீரராக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. இருவருமே தங்களது உடற்தகுதியை நிரூபித்துவிட்டதால் யார் ஆஸ்திரேலிய களத்திற்கு சரியாக இருப்பார்கள் என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

பிசிசிஐ செய்யும் தவறு
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் பிசிசிஐ தவறு செய்துள்ளதாக முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக்-ஐ மெயின் அணியில் சேர்க்காமல் தவறு செய்துள்ளனர். இது உலகின் மிகச்சிறந்த காரை குடோனில் அடைத்து கிடப்பில் போட்டது போன்றதாகும். தேவையான நேரத்தில் பயன்படுத்தாமல் அந்த காரை வைத்திருந்து என்ன பயன்?

அனுபவம் வேண்டாம்
உம்ரான் மாலிக்கிற்கு அனுபவம் இல்லை தான். ஆனால் அவர் மணிக்கு 150+ கிமீ வேகத்தில் வீசுகிறார். ஆஸ்திரேலிய களத்தில் அந்த 150+ வேகம் மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது அங்கு 140 கிமீ வேகத்தில் நன்றாக வீசுவதை விட, 150 கிமீ வேகத்தில் வீசினால் பெரிய பலன் கிடைக்கும் என பிரட் லீ கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
