
சிஎஸ்கேவில் புஜாரா
ஐபிஎல் 2021 தொடரில் இந்த முறை சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார் டெஸ்ட் கிங் சத்தீஸ்வர் புஜாரா. இவர் சிறப்பான டெஸ்ட் வீரராக சர்வதேச அளவில் அறியப்படுகிறார். ஆயினும் ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2014க்கு பிறகு இந்த சீசனில்தான் இவர் இணைந்துள்ளார். இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஜாரா மகிழ்ச்சி
தான் சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனியின்கீழ் விளையாடுவது குறித்து சமீபத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள புஜாரா, அணிக்காக 100 சதவிகிதம் சிறப்பான ஆட்டத்தை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களிலும் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது.

பிரட் லீ கேள்வி
ஆயினும் இதுவரை 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, கடைசியாக கடந்த 2019ல் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக இந்த வடிவத்தில் விளையாடியுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து டி20 வடிவத்திற்கு புஜாரா மாறுவாரா என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கேள்வி எழுப்பியுள்ளார்.

லீ பாராட்டு
புஜாரா மிகவும் தீவிரமான கிரிக்கெட் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிரட் லீ, அவரது திறமை உள்ளிட்டவை குறித்த எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல் என்பது 90 நிமிடங்களில் முடியக்கூடிய டி20 வடிவம் என்பதுதான் தற்போது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

நெருக்கடியில் விளையாட வேண்டும்
இந்த வடிவத்தில் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் ரன்களை குவிக்க வேண்டும் என்றும் நெருக்கடியான சூழலிலும் விளையாட வேண்டும என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நெருக்கடி சூழலில் அவர் தனது சிறப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தற்போதும் சிறப்பாக விளையாடக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
தான் புஜாராவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்துள்ள பிரட் லீ, அவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல்லின் டி20 வடிவத்தில் அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை இந்த சீசனில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











