SRH விக்கெட்டுகளை வேட்டையாடிய ஜடேஜா.. எத்தனை நாள் ஆச்சு இப்படி பார்த்து.. CSK எளிதில் 2 புள்ளிகள்?
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தியது.
சென்னை ஆடுகளம், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது கொஞ்சம் தோய்வு அடைவதால், ஐதராபாத்தை குறைந்த இலக்கில் சுருட்ட கடுமையாக உழைத்தனர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாரி புருக், ஒரு பவுண்டரி அடித்தார்.

இதனையடுத்து தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் ஹரி புருக்கை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை சிஎஸ்கே வீணடித்தது. எனினும் ஹரி புருக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அபிஷேக் சர்மா , ராகுல் திரிபாதி ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டது. எனினும் ராகுல் திரிபாதி 21 ரன்களிலும், அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் வெளியேறினர்.
இதனையடுத்து, தீக்சனா, ஜடேஜா ஜோடி இணைந்து ஐதராபாத் விக்கெட்டை வேட்டையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏய்டன் மார்க்ரம், கிளாசன், மாயங் அகர்வால ஆகியோர்12, 13மற்றும் 14ஆம் ஓவர்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் மார்கோ யான்சென் 17 ரன்களில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications