For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4- 2 எடுத்து தடுமாறிய ராஜஸ்தான்.. பட்டையை கிளப்பிய சஞ்சு சாம்சன், ஹேட்மயர்.. RR திரில் வெற்றி

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத்திடம் தோல்வி அடைந்தற்கு ராஜஸ்தான் அணி பழித் தீர்தது கொண்டது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர் விரித்மான் சாஹா ஒரு பவுண்டரி அடித்த நிலையில், பந்தவீசிய போல்டிடம் வித்தியாசமான முறையில் கேட்ச் ஆனார். தமிழக வீரர் சாய் சுதர்சன் 20 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்களும், எடுத்தனர்.

Brilliant innings from sanju samson and Hetmyer Puts RR on top of the table

இறுதியில், மில்லர் மற்றும் மனோகர் ஜோடி அதிரடியாக விளையாட குஜராத் கடைசி 4 ஓவரில் குஜராத் அணி 52 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜெய்ஷ்வால் ஒரு ரன்னிலும், பட்லர் டக் அவுட்டாக, 4 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தேவுதத் படிக்கல் 26 ரன்கள் எடுக்க, ரியான் பராக் 5 ரன்களில் வெளியேறினார். இதனால் தடுமாறிய ராஜஸ்தானை கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுமையாக விளையாடி நிலை நிறுத்தினார். முதலில் அமைதி காத்த சஞ்சு சாம்சன், பிறகு ரஷித் கான் ஓவரில் ஹாட் டிரிக் சிக்சர் அடித்தார்,

இதனால் சஞ்சு சாம்சன் 30 பந்தில் 62 ரன்கள் அடித்தார். இதில் 6 சிக்சர்களும் அடங்கும். சஞ்சு சாம்சன் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் அபாரமாக விளையாடி ராஜஸ்தான் அணியை மீண்டும் காப்பாற்றினார். கடைசி 4 ஓவரில் 44ரன்கள் தேவைப்பட, 17வது ஓவரில் 12 ரன்கள் அடிக்கப்பட்டது.

இறுதியில் அஸ்வின் 1 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 7 ரன்கள் தான் வெற்றிக்கு தேவைப்பட, ஷிம்ரன் ஹெட்மயர் சிக்சர் அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்நியை உறுதி செய்தார். ஹெட்மயர் 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ராஜஸ்தான் அணி முதலிடத்தை பிடித்தது.

Story first published: Sunday, April 16, 2023, 23:25 [IST]
Other articles published on Apr 16, 2023
English summary
Brilliant innings from sanju samson and Hetmyer Puts RR on top of the table 4- 2 எடுத்து தடுமாறிய ராஜஸ்தான்.. பட்டையை கிளப்பிய சஞ்சு சாம்சன், ஹேட்மயர்.. RR திரில் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+