சென்னை : கிரிக்கெட் என்பது களத்தில் மட்டும் விளையாடுவது அல்ல, மனதளவிலும் விளையாடும் MInd game ஆட்டம் என்பதற்கு சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நல்ல எடுத்துக்காட்டு. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் பட்லர் அரைசதம் அடிக்க, அஸ்வின் மற்றும் சிம்ரன் ஹேட்மயர் ஆகியோர் தலா 30 ரன்களும், படிக்கல் 38 ரன்களும் எடுத்தனர். இதில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 176 ரன்கள் ஏடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

சென்னையில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால், சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவரை முன்பே கொடுத்துவிடலாம் என சாம்சன் முடிவு செய்தார். ஆட்டத்தின் 5வழ ஓவரில் சாம்பா வீச, அதில் சிஎஸ்கே 9 ரன்கள் அடித்தது. பவர்பிளேவின் கடைசி ஓவரை அஸ்வின் வீசினார்.
அப்போது 2வது பந்தை அஸ்வன் வீச வரும் போதே, அதனை இறங்கி வந்து சிக்சர் அடிக்க ரஹானே முடிவு செய்து இறங்கி வந்தார். இதனை பார்த்த அஸ்வின், திடீரென்று பந்தை வீசாமல் நிறுத்திவிட்டார். இதனால் ரஹானே கடுப்பானார். இதனையடுத்து, மீண்டும் அஸ்வின் பந்தை வீசும் போது, ரஹானே பந்தை எதிர்கொள்ளாமல் நகர்ந்து வந்தார்.
அஸ்வின், ரஹானேவை கடுப்பாக்கும் வகையில் செயல்பட, அஸ்வினின் மருந்தை அவருக்கே திருப்பு கொடுத்தார். இதே போன்று அதே ஓவரில் ரஹானே கவரில் சிக்சரை பறக்கவிட்டார். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது.