அப்படி என்ன அவசரம்? 2 நாளைக்கு முன்பே சகோதரப் பாசத்தை கொட்டிய யார்க்கர் மன்னன் பும்ரா!
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா இரண்டு நாட்களுக்கு முன்பே ரக்ஷா பந்தன் கொண்டாடி இருக்கிறார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கிரிக்கெட் தொடரில் மோதி வரும் நிலையில் பும்ரா இந்தியாவில் ஓய்வில் இருக்கிறார்.
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் ஒரு பக்கம் என்றால், மறுபுறம் சகோதரப் பாசத்தை காட்டும் ரக்ஷா பந்தன் திருவிழாவும் கொண்டாடப்பட உள்ளது. அதை ஆகஸ்ட் 13 அன்றே கொண்டாடி இருக்கிறார் பும்ரா.

கட்டாய ஓய்வு
உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால், அவர் இந்தியாவில் இருக்கிறார்.

முன்பே ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 13 அன்றே ரக்ஷா பந்தன் கொண்டாடிய பும்ரா அந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன் சகோதரி ஜுஹிகாவுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பும்ரா தான் ஏன் அவசரமாக இரு நாட்கள் முன்பே கொண்டாடினேன் என்பது குறித்து கூறி இருக்கிறார்.
ஏன் அவசரம்?
இந்திய அணி கடமைகள் இருப்பதால் ரக்ஷா பந்தன் அன்று நான் இங்கே இருக்க மாட்டேன். அதனால், ஜுஹிகாவுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடுவதை தவிர்க்க முடியாது என்பதால் முன்பே கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சிப் போட்டி
ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெற உள்ள பயிற்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளார் பும்ரா. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 அன்று துவங்க உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார். அந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் மன்னன்
ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 10 போட்டிகள் மட்டுமே ஆடி உள்ளார். அதற்குள் 49 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அவரது பவுலிங் எகானமி 2.66 என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications