Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா காயத்தால் இந்திய அணியில் பாதகம் என்ன - கால் உடைந்து போன ரோகித் பவுலிங்.. நிரப்ப முடியாத இடம்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி நட்சத்திர வீரர் பும்ரா விலகியதால் ஏற்படும் சாதக பாதங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Recommended Video

T20 Worldcupல் இருந்து காயம் காரணமாக விலகிய Bumrah!

பும்ரா இல்லாததால் இந்திய அணிக்கு சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆட்டத்தின் இறுதி கட்டங்களில் யாக்கர்களை வீசி எதிரணிக்கு கடும் நெருக்கடி தரக்கூடிய வீரர் பும்ரா.

பும்ராவின் அரைசதம்

பும்ராவின் அரைசதம்

தற்போது பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவு ஏற்படுத்தியிருக்கிறது. பும்ரா காயம் காரணமாக இரண்டு மாதத்திற்கு பிறகு தான் இந்திய அணிக்கு வந்துள்ளார். அவர் பார்மில் இல்லாததால், கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் கூட பந்துவீச்சில் 50 ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்தார்.

முக்கியமான வீரர்

முக்கியமான வீரர்

இதனை வைத்து பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய மைனஸ் ஆக பார்க்கத் தேவையில்லை என்ற ஒரே சாதகத்தை மட்டும் சொல்லலாம். ஆனால் பும்ராவை அவ்வளவு எளிதாக மதிப்பிட முடியாது. பும்ரா போன்ற வீரர்கள் என்னதான் பார்மில் இல்லை என்றாலும் முக்கிய ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை தேடி கொடுப்பார்கள்.

பய உணர்வு

பய உணர்வு

கிரிக்கெட்டில் எப்போதுமே பய உணர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது ஒரு வீரர் குறித்தான பயம் எதிரணிக்கு எப்போதுமே இருக்க வேண்டும். சச்சின், சேவாக், விராட் கோலி ,தோனி போன்ற வீரர்களை பார்த்து எதிரணி வீரர்கள் பயப்படுவார்கள். அந்த அச்ச உணர்வே எதிரணி வீரர்களை சிறப்பாக செயல்படவிடாமல் தடையாக மாறிவிடும்.

பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி

பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி

இது குறித்து ஆண்டர்சனே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சச்சின் போன்ற வீரரை பார்த்து நாங்கள் பயந்தால் எப்படி எங்களால் அவருக்கு பந்து வீச முடியும் என்று கூறியிருக்கிறார். இதே தான் பும்ராவும் இந்திய அணிக்காக செய்திருக்கிறார். பும்ராவை பார்த்து பேட்ஸ்மேன்கள் அச்சம் கொள்வார்கள். என்ன தான் பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும், பும்ராவின் யாக்கருக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம் என்று மனதளவில் ஒரு சந்தேகம் இருக்கும்.

வேறு யாரும் இல்லை

வேறு யாரும் இல்லை

அது பும்ராவுக்கு சாதகமாக மாறும். தற்போது இந்திய அணியில் எதிர் அணி பார்த்து பயப்படும் அளவுக்கு எந்த ஒரு பந்துவீச்சாளர்களும் இல்லை என்பது தான் உண்மை. பும்ராவுக்கு பதில் வேறு எந்த ஒரு வீரர் வந்தாலும் இனி அந்த அச்ச உணர்வு எதிரணி வீரர்களுக்கு வரப்போவதில்லை. இதுதான் இந்திய அணிக்கு பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, September 29, 2022, 17:38 [IST]
Other articles published on Sep 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+