For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த வீரர் 4 அடி ஓடி வந்து பவுலிங் செய்தால்.. பந்து 150 கிமீ வேகத்தில் வரும்.. வியக்கும் பராஸ் ஆம்ரே

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா குறித்து முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே கூறியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பும்ராவுடன் இணைந்து பணியாற்றி வந்த பராஸ் ஆம்ரே, அவரின் டெக்னிக் குறித்து விவரமாக பேசி இருக்கிறார்.

அதில், திறமையை வைத்து பும்ராவை எடைப் போட்டால் அவர் ஃபிரீக். ஒரு பவுலர் பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவதற்காக கொஞ்சம் பின்னால் இருந்து ஓடி வந்து செய்தார். அப்போது அவர்களுக்கு நல்ல வேகம், ஸ்விங், க்ரிப் உள்ளிட்டவை கிடைக்கும். ஆனால் பும்ராவுக்கு அப்படியல்ல. 4 அடி தூரத்தில் இருந்து ஓடி வந்து பவுலிங் செய்தாலும், அவரால் அதே வேகத்தை கொண்டு வர முடியும்.

IND vs SL Virat Kohli Jasprit Bumrah

அவர் கொஞ்சம் தூரத்தில் இருந்து ஓடி வந்து பவுலிங் செய்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. அது அவரின் இயல்பான திறமை. அதேபோல் உலகின் எந்த வேகப்பந்துவீச்சாளரை எடுத்து கொண்டாலும், பும்ராவின் ரிலீஸ் வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால் மற்றவர்களை விடவும் 20 செ.மீ முன்பாகவே பும்ரா ரிலீஸ் செய்துவிடுவார். இந்த இடைவெளியை ஒரு பவுலர் கடந்துவிட்டால், அவர் பந்து பூமராங் போல் செயல்படும்.

இந்த 20 செ.மீ இடைவெளியின் பலன் அதுதான். அதேபோல் பும்ராவின் ஆக்‌ஷனில் இருந்து ஹைப்பர் எக்ஸ்டென்ஷன். அதனால் தான் அவரை ஃபிரீல் என்று சொல்கிறேன். என்னை பொறுத்தவரை அவருக்கு பிறந்ததில் இருந்த அந்த திறமை இருக்கிறது. அதேபோல் ரஞ்சி டிராபி கிரிக்கெட், முதல்தர கிரிக்கெட் ஆகியவற்றை விளையாடியதன் மூலமாக நல்ல அடித்தளம் அவருக்கு கிடைத்துவிட்டது.

அதேபோல் ஒரு சீசன் முழுக்க அவரால் காயமடையாமல் பவுலிங் செய்ய முடியுமா என்பதையும் பரிசோதித்து பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் போதுமான அனுபவம் கிடைத்த பின்னர், பும்ராவின் புத்திசாலித்தனமும் பவுலிங்கில் கலந்துவிடுகிறது. இதன் மூலமாக தான் பும்ராவால் சரியான நேரத்தில் சரியான பந்தை வீச முடிகிறது. அவர் சாதாரணமாக ஓடி வந்து பந்தை பேட்ஸ்மேனை நோக்கி வீசக்கூடிய பவுலர் அல்ல.

அவர் ஒவ்வொரு பந்தையும் சிந்தித்து வீசக் கூடியவர். ஒரு பந்தை வீசிய பின், பேட்ஸ்மேனின் ஷாட்டை கண்காணிப்பார். பிட்சில் என்ன நடக்கிறது என்பதை சிந்திப்பார். என்னை பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரரின் சிறந்த ஆயுதம் மூளை தான். பும்ராவின் ஆயுதமும் அவரின் மூளை தான். ஆட்டத்தையும், பேட்ஸ்மேன்களையும் புரிந்து கொண்டு செயல்படுபவர் தான் பும்ரா என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 11, 2024, 18:16 [IST]
Other articles published on Aug 11, 2024
English summary
Bumrah is a Freak bowler who can bowl at 145km speed with a 4 steps of walking says Former Coach Paras Mhambrey
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+