For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நாங்க என்னப்பா பாவம் செஞ்சோம்”.. பும்ரா ஏற்படுத்திய தாக்கம்.. முக்கிய பணிகளை தவறவிட்ட பிசிசிஐ!

மும்பை: டி20 உலகக்கோப்பைகாக பும்ராவின் விஷயத்தில் பிசியாக உள்ள பிசிசிஐ, முக்கிய பணியை செய்ய தவறியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பை விட, ஜஸ்பிரித் பும்ராவின் விலகல் குறித்த பேச்சு தான் இந்திய கிரிக்கெட் முழுவதும் பரவியுள்ளது.

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாட முடியாமல் தடுமாறினார். இதனையடுத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற நோக்கில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து பும்ராவுக்கு மாற்று வீரரை தேடும் பணிகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.

தடுமாறி வரும் பிசிசிஐ

தடுமாறி வரும் பிசிசிஐ

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவின் விஷயத்தை பார்த்துக்கொண்டே மற்றொரு விஷயத்தை பிசிசிஐ செய்யாமல் தவறியுள்ளது. அதாவது இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் முடிந்தவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. இதற்கான அணியை நேற்றே பிசிசிஐ அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனை அறிவிக்க மேலும் 2 - 3 நாட்கள் ஆகும் எனத்தெரிகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் தான், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து அலோசிக்கவுள்ளனர். தற்போதைக்கு கேப்டனாக ஷிகர் தவானும், துணைக் கேப்டனாக சஞ்சு சாம்சனும் நியமிக்கப்படவுள்ளனர் என்பது மற்றும் தெரியவந்துள்ளது. ரோகித் சர்மாவின் படை அக்டோபர் 6ம் தேதியன்றே ஆஸ்திரேலியாவுக்கு செல்வதால், புதிய அணி தான் களமிறங்குகிறது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை நிரப்புவதற்காக முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார், ஆவேஷ் கான், உமேஷ் யாதவ் ஆகியோர் போட்டிப்போட்டு வருகின்றனர். இவர்களில் ஷமிக்கும், சிராஜ்-க்கும் பிசிசிஐ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, September 30, 2022, 11:34 [IST]
Other articles published on Sep 30, 2022
English summary
Jasprit Bumrah's Injury delays BCCI’s selection process of Team India Squad for SA ODI seris
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+