Exclusive: பும்ரா மணப்பது தமிழ்ப் பெண்ணா? மராட்டியரா? பேசிக்கிட்டு இருந்தா போதாது.. அடிச்சுக்காட்டு!
சென்னை: நம்ம ஐஸ்பிரித் பும்ரா கல்யாணம் பண்ணப் போவது தமிழ்ப் பெண் என்று ஒரு குரூப்பும், மராட்டியர் என்று மற்றொரு குரூப்பும் சமூக தளங்களில் மோதிக் கொண்டு இருக்கின்றன. (வெளங்கிடும்)
இந்திய கிரிக்கெட் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் 'கிங்' ஐஸ்பிரித் பும்ரா. சிரிச்சா அன்பு.. முறைச்சா வம்பு ஃபார்முலாவில் வெரைட்டி கட்டி பந்து வீசும் இந்த ரைட் ஆர்ம் ஃபாஸ்ட் சூரனை பார்த்து ஒரு பெண் சிரிக்க, நம்மாளு அவர் ஃபார்முலா படி அன்பில் விழுந்துவிட்டார்.. அதாங்க காதல்ல விழுந்துட்டார்.
பெயர் சஞ்சனா கணேசன்... எதே கணேசனா? என்னய்யா இது 'பாவம் கணேசன்' , 'ஜெமினி கணேசன்' மாதிரி பெயர் சொல்றீங்க? நம்மூரு பொண்ணா? என்று பலரும் கன்ஃபியூஸ் ஆக, நமக்கும் அதே குழப்பம் தான்.

வெறித்தன ஃபாலோயர்ஸ்
2014ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை சென்ற சஞ்சனா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது ஸ்டைல், பேட்டிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கு. அந்த கூட்டம் கிரிக்கெட்-லாம் பார்க்காது. இவருடைய பேட்டியை பார்த்துவிட்டு சேனலை மாற்றிவிடும். அந்தளவுக்கு தனக்கென்று ஃபாலோயர்ஸ் கொண்டவர் சஞ்சனா.

சஞ்சனா ஹிஸ்டரி
சரி, நம்ம ஒன் இந்தியா தமிழ் வாசகர்களும் சஞ்சனா கணேசன் பற்றி தெரிந்து கொள்ளட்டுமே என்று 'போட்றா ஃபோன' மோடில் , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுவின் வர்ணனையாளர்களில் ஒருவரான பிரதீப் முத்துவை தொடர்பு கொண்டு, சஞ்சனா கணேசனின் எஸ்டிடி-யை கேட்க, கல்லு மனம் படைச்சவர் போல, வாயை திறக்க மாட்டேனுட்டார்.

அனுபமா பற்றி பேசுனாங்க
அப்புறம் ஒருவழியா கன்வின்ஸ் செய்து கேட்ட பிறகு, சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 'ஆக்சுவலி, பும்ரா - சஞ்சனா லவ் எங்களுக்கு முன்னாடியே தெரியும். ஆனால், மீடியா உட்பட எல்லோரும் பும்ரா - மலையாள நடிகை அனுபமா பற்றி கிசுகிசுத்துகிட்டு இருந்தாங்க.

அப்பா பியூர் தமிழ்
சஞ்சனா ரொம்ப நல்ல பொண்ணு. கலகலப்பா இருப்பாங்க' என்றவரிடம், 'ப்ரோ அடுத்தக்கட்டத்துக்கு வாங்க.. கணேசன் பெயர் நம்மூர் பெயர் மாதிரி இருக்கே?' என்று நாம் கியர் மாற்ற, 'அதுவா... சஞ்சனாவின் அப்பா கணேசன் நம்ம தமிழ்க்காரர். பியூர் தமிழ். அதனால் தான் பெயர் சஞ்சனா கணேசன். ஆனா அம்மா புனேவைச் சேர்ந்தவங்க. மராத்தி" என்றார்.

சூப்பர் டைப் கேர்ள்
சஞ்சனா நல்லா தமிழும் பேசுவாங்க. மராத்தியும் தெரியும். வெளியில ஆங்கிலம், ஹிந்தி, மராத்தின்னு பேசினாலும் எங்க கூட-லாம் தமிழ்ல்ல தான் பேசுவாங்க. உண்மையில் ரொம்ப நல்ல டைப் பிரதர்" என்றார். ஆக, பும்ராவுக்கு மனைவியாக போறவங்களுக்கு தமிழும் தெரியும் என்பதை இந்த உலகத்துக்கு ஒன் இந்தியா தெரியப்படுத்துகிறது.
இந்த ஜோடியின் திருமணம், கோவாவில் வரும் மார்ச் 14ம் தேதி நடக்கவுள்ளதாக தெரிகிறது.
பும்ரா - சஞ்சனா கணேசனுக்கு நமது வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.


Click it and Unblock the Notifications