Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா ஜாம்பவான் வீரர்தான்.. ஆனால் என்னுடன் ஒப்பிடாதீர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வாசிம் அக்ரம்!

மும்பை: என்னையும் ஜஸ்பிரிட் பும்ராவையும் ஒப்பிடவே கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 90களில் ஆடிய எனக்கும், தற்போது கிரிக்கெட் ஆடி வரும் பும்ராவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதாக கூறிய அவர், பும்ரா சமகால கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் என்றும் பாராட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா உச்சத்தில் இருந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என்று 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா அருகில் கூட எந்த பந்துவீச்சாளரும் வர முடியவில்லை. இதுவரை 48 டெஸ்டில் விளையாடி 219 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் ஆடி 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

Bumrah vs Akram

SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா அண்மையில் படைத்தார். குறிப்பாக வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்ததால், வாசிம் அக்ரம் சிறந்த பவுலரா அல்லது பும்ரா சிறந்த பவுலரா என்ற விவாதம் சோசியல் மீடியாவில் தொடங்கியது. இதனை இந்திய முன்னாள் வீரர் வருன் ஆரோன் தொடங்கி வைத்துள்ளார்.

வருண் ஆரோன் பேசுகையில், பும்ராவை ஜீனியஸ் என்று பாராட்டுவதே குறைவான ஒன்றுதான். SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் வாசிம் அக்ரமை கடந்து சென்றுள்ளார். இந்த உலகிலேயே வாசிம் அக்ரம் போன்ற சிறந்த பவுலர் யாரும் கிடையாது. தற்போது அக்ரம் அளவிற்கு பும்ராவும் உயர்ந்துள்ளார் என்று தெரிவித்தார்.

வருண் ஆரோனின் பேச்சு ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், ஜஸ்பிரிட் பும்ரா நிச்சயமாக மிகச்சிறந்த பவுலர். அவரின் ஆக்‌ஷன் மிகவும் வித்தியாசமானது. அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அதேபோல் பும்ராவின் திறமையை இந்திய அணி நிர்வாகம் சிறப்பாக கையாள்கிறது. அவரை சரியாக நிர்வகிக்கிறது.

அவருடன் என்னுடன் ஒப்பிடுவது சரியான ஒன்று அல்ல.. நாம் 90களில் ஆடி இருக்கிறேன். அவர் சமகால கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருக்கிறார்.. எங்கள் இருவரையும் ஒப்பிடக் கூடாது. அதேபோல் பும்ரா வலது கை பவுலர்.. நான் இடதுகை பவுலர்.. அதனால் எங்கள் இடையிலான ஒப்பிடுதலை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டேன்.. பும்ரா சமகாலத்தில் மிகச்சிறந்த பவுலர்.. நான் எப்படி எனது காலத்தில் ஆடினேனோ, அப்படிதான் பும்ராவும் சிறப்பாக ஆடி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, September 2, 2025, 14:53 [IST]
Other articles published on Sep 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+