
நடந்து முடிந்த 29 போட்டிகள்
ஐபிஎல்2021 தொடரின் 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்றைய 30வது போட்டி ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் நடைபெற இருந்த நிலையில் தற்போது கேகேஆர் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெகட்டிவ் ரிசல்ட் அறிவிப்பு
மேலும் சிஎஸ்கே அணியிலும் 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறப்பட்டு பின்பு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், எஸ்ஆர்எச் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முகாமிட்டுள்ளனர். அங்கு வரும் 8ம் தேதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

ரத்து செய்ய கோரிக்கை
இந்நிலையில் மாவட்ட கிரிக்கெட் கழக ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்புக்களுக்கு இடையில் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
Cancel IPL is trending !!#IPL2020 #KKRvRCB pic.twitter.com/Ilztd43Pms
— Velar7 (vineethsays) May 3, 2021
ட்விட்டரில் ட்ரெண்ட்
மேலும் கேன்சல் ஐபிஎல் என்பது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதை வைத்து கேலியான மீம்ஸ்களும் வெளியிடப்பட்டு வருகிறது. புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ள எஸ்ஆர்எச் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் ரத்தை ஆதரிப்பதாகவும் முதலிடங்களில் உள்ள ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்கள் இதற்கு மகிழ்ச்சியடையவில்லை என்பது போலவும் மீம்ஸ் வெளியாகி வருகின்றன.

ரத்து செய்யும் எண்ணமில்லை
இதனிடையே, ஐபிஎல் போட்டிகள் ரத்து குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை எந்த வடிவத்திலாவது நடத்தி முடிக்கவே பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துவரும் நிலையிலும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் விஷயத்தில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.


Click it and Unblock the Notifications