கோலியுடன் மனக் கசப்பா? முதல் ஒருநாள் போட்டியில் உள்ள சிக்கல்கள்.. ரோகித் சர்மா அதிகாரப்பூர்வ தகவல்!
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வந்த சூழலில் கொரோனா தாக்கம் பெரும் மாற்றத்தை செய்துவிட்டது.

தொடக்கமே பிரச்சினை
அணியில் இருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதற்காக மாற்று வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரில் வைட் வாஷான இந்திய அணி இந்த தொடரின் தொடக்கத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.

ரோகித் சர்மா பதில்
இந்நிலையில் இந்திய அணியின் திட்டம் குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்துள்ள ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி இதற்கு முன்னர் பல வெற்றிகளை பெற்றுள்ளன. தென்னாப்பிரிக்காவுடன் ஒரு தொடரை தோற்றதால் தான் எங்களுக்கு எந்தவித பதற்றமும் ஏற்பட்டுவிடாது. அது எங்களுக்கு ஒரு பாடம். அணி வீரர்கள் நிறைய கற்றுக்கொண்டு கம்பேக் கொடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

விராட் கோலியுடன் பேச்சு?
ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் முதல் முறையாக விராட் கோலி விளையாடவுள்ளார். அவருடன் உறவு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, விராட் கோலியின் கீழ் நான் துணைக்கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அவர் குறித்து எனக்கு நன்கு தெரியும். அவர் அணியை எங்கு விட்டுச்சென்றாரோ, அந்த இடத்தில் இருந்து அணியை மேம்படுத்துவது எனக்கு சுலபம் தான். அனைவருக்கும் அவர் அவர்களின் பணி என்னவென்பது தெரியும். எனவே பெரியளவில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

இந்திய வீரர்களின் உடல்நிலை
இதே போல கொரோனா பாதித்த வீரர்களின் உடல்நிலை குறித்து பேசிய ரோகித், அவர்கள் அனைவரும் இன்னும் குவாரண்டைனில் தான் உள்ளனர். அவர்களின் உடல்நலம் தேறிவருகிறது. என்னைப் பொறுத்தவரை இது மற்ற வீரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கிறேன். சவாலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். என ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications