Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் கேப்டன் நாக்.. பதுங்கி பாய்ந்த ஸ்மித்.. கடைசி ஓவரில் ஆட்டத்தையே மாற்றி அசத்தல்!

புனே: கேப்டனுக்குரிய ஆட்டம் ஆடிய புனே சூப்பர் ஜியான்ட்ஸ் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வரையிலான த்ரில் போட்டியில் தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

வழக்கமாக கடைசி ஓவரில் வெற்றிக்கான ரன்னை அடிக்கும் டோணியை பார்க்க வைத்து, மறுமுனையில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசி, தானும் ஒரு மிகச்சிறந்த ஃபினிஷர்தான் என்பதை நிரூபித்தார் ஸ்மித்.

185 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திச் சென்ற புனே அணிக்கு ஆரம்பத்தில் அசத்தல் ஓபனிங் கொடுத்தார் ரஹானே. 34 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகள் உதவியோடு அவர் குவித்த 60 ரன்கள் எதிரணியை குலை நடுங்க செய்துவிட்டது. டெஸ்ட் மேட்சில் சிக்கிய ஃபார்மை அப்படியே டி20 போட்டிக்கு ஷிப்ட் செய்திருந்தார் ரஹானே.

 காஸ்ட்லி வீரர்

காஸ்ட்லி வீரர்

மயங்க் அகர்வால் 6 ரன்களிலும், 'காஸ்ட்லி வீரர்', பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களிலும் நடையை கட்டியபோதிலும், ஒருமுனையில் கேப்டன் ஸ்மித் நங்கூரம் போட்டு நின்றிருந்தார்.

 மெதுவான தொடக்கம்

மெதுவான தொடக்கம்

தொடக்கத்தில் ஸ்மித் பொறுமையாக பந்துக்கேற்ற ரன்னை எடுத்தபடி இருந்ததை பார்த்த ரசிகர்கள், டெஸ்ட் போட்டி பாதிப்பிலிருந்து அவர் வெளியேறவில்லை என்றுதான் நினைத்தனர். கடந்த வருடம் மே மாதம்தான் ஸ்மித் கடைசியாக டி20 போட்டியொன்றில் ஆடியிருந்தார் என்பது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.

 பதுங்கி பாய்ந்தார்

பதுங்கி பாய்ந்தார்

ஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பதை ஆட்டத்தின் கடைசி கட்ட ஓவர்களில் நிரூபித்தார் ஸ்மித். விக்கெட்டை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், அமைதியாக ஸ்மித் ஆட்டத்தை தொடங்கியது அப்போதுதான் ரசிகர்களுக்கு புரிந்தது.

 அதிரடி

அதிரடி

30 ரன்களை தாண்டியதுமே மெல்ல மெல்ல கியரை மாற்றி அதிரடி காட்டினார் ஸ்மித். முக்கிய கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறியபோது, டோணி களம் புகுந்தார். இருப்பினும் இம்முறை ஆட்டத்தை ஃபினிஷ் செய்தது டோணி கிடையாது, ஸ்மித்தான்.

 கடைசி ஓவர் த்ரில்

கடைசி ஓவர் த்ரில்

கடைசி ஓவருக்கு தேவைப்பட்டது 13 ரன்கள். ஓவரை வீசியது பொல்லார்ட். முதல் பந்தில் டோணி எடுத்தது சிங்கிள் ரன். 2வது பந்தில் ஸ்மித்துக்கு கிடைத்ததும் சிங்கிள்தான். டோணி ஒரு சிக்சர் விளாசி புனே அணிக்கு ஆக்சிஜன் கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஏனெனில் 3வது பந்திலும் சிங்கிள்தான் கிடைத்தது.

 சிக்சர் பறந்தது

சிக்சர் பறந்தது

கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் விளாச வேண்டிய நெருக்கடியில் புனே அணி சிக்கியது. ரசிகர்களோ நகத்தை கடித்தனர். அப்போதுதான் புறப்பட்டது அந்த இமாலய சிக்சர். ஸ்லோ பந்து ஒன்றை பொல்லார்ட் வீச, அதை வைடு லாங்-ஆன் திசையில் சிக்சராக மாற்றினார் ஸ்மித். லேசாக பெருமூச்சு விட்டனர் புனே ரசிகர்கள்.

 அழகான சிக்சர்

அழகான சிக்சர்

2 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பொல்லார்ட் அந்த பந்தை சற்று யார்க்கர் லெந்த்தில் வீசினார். அதை அழகாக கிளிக் செய்து டீப் மிட்-விக்கெட் திசையில் மற்றொரு சிக்சராக மாற்றினார் ஸ்மித். அவ்வளவுதான் மைதானமே ஆரவாரத்தில் அலறியது.

 வெற்றி நடை

வெற்றி நடை

வழக்கமாக சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைக்கும் டோணி, இம்முறை ஸ்மித் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்ததை மறுமுனையில் கூலாக பார்த்து ரசித்தபடி நின்றார். 54 பந்துகளில் 84 ரன்களை குவித்த மகிழ்ச்சியோடு பெவிலியனுக்கு வெற்றி நடை போட்டார் ஸ்மித்.

Story first published: Friday, April 7, 2017, 0:27 [IST]
Other articles published on Apr 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+