மாறும் அணிகள், மாறும் வீரர்கள், மாறும் கேப்டன்கள்
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சீசனுக்கான வீரர்கள் ஏலம் துவங்க உள்ள நிலையில், விளையாட உள்ள 8 அணிகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளது. பல அணிகளில் கேப்டன்கள் மாறுகின்றனர்.
கடந்த சீசனில் விளையாடிய குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிகள் இந்த சீசனில் கிடையாது. அதற்கு பதிலாக முன்பிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன.

குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்ரான் ராயல்ஸ் அணி தக்க வைத்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக அவர் இருப்பாரா என்பது தற்போதைக்கு உறுதியில்லை.
புனே அணியில் விளையாடிய கேப்டன் கூல் டோணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். அதற்கு அவர்தான் கேப்டனாக இருப்பார். மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா தக்க வைக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவர் தொடருவார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஜாகிர் கான் இந்த முறை விளையாட மாட்டார். அதனால், புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னரையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லியையும் தக்க வைத்துள்ளன. அவர்களுக்கு பிரச்னை இருக்காது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அக்சார் படேலை மட்டுமே தக்க வைத்துள்ளது. கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் ஏலத்துக்கு வந்துள்ளார். அவரை அந்த அணி ஏலத்தில் எடுக்குமா, கேப்டனாக இருப்பாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
இதில் மிகவும் மோசமான நிலைமை கவுதம் கம்பீருடையதுதான். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அதனால், ஏலத்தின்போது அவர் தக்க வைக்கப்பட்டாலும், கேப்டனாக இருப்பாரா என்பது சந்தேகமே.
Story first published: Saturday, January 27, 2018, 10:12 [IST]
Other articles published on Jan 27, 2018


Click it and Unblock the Notifications