Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன டாப் 5 கேப்டன்கள்.. இந்திய கேப்டனும் இடம் பெற்றுள்ளார்!

மும்பை: சர்வதேச டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிப்பது ஒருபுறம் இருந்தாலும், பல நேரங்களில் அடித்து ஆட ஆசைப்பட்டு ரன் எதுவும் எடுக்காமல் 'டக்-அவுட்' ஆகி ஏமாற்றம் அளிப்பதும் உண்டு. அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து அதிக முறை டக் அவுட் ஆகி ஆட்டமிழந்த மோசமான சாதனையைப் படைத்த டாப்-5 கேப்டன்களின் பட்டியல் தான் இது. இதில் 5 சதம் அடித்த இந்திய கேப்டனும் இடம்பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் முதலிடத்தில் உள்ளார். அவர் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்திய போது 8 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் டக்-அவுட் ஆகி இருக்கிறார். ஜிம்பாப்வே அணியின் தற்போதைய கேப்டன் சிக்கந்தர் ராசா 7 முறை டக்-அவுட் ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரின் கடைசி போட்டியிலும் அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Captains With Most Ducks in T20Is - Indian Legend also included in this unwanted list

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் 6 டக் அவுட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4500 ரன்களைக் கடந்து உலகிலேயே அதிக ரன்கள் குவித்த வீரராக பாபர் அசாம் இருக்கிறார். ஆனால், கேப்டனாக இந்த மோசமான சாதனையை செய்து இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டனும், 2024 டி20 உலகக்கோப்பையை வென்று தந்தவருமான ரோஹித் சர்மாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். அவர் இந்திய அணியை வழிநடத்திய போது 6 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 5 சதங்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல்லுடன் அதிக சர்வதேச டி20 சதம் அடித்த பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள ரோஹித் சர்மா, ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 12 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். இந்திய வீரர்கள் வரிசையில் அவரே அதிக முறை டக்-அவுட் ஆனவராக இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அளவில் அதிக ரன் குவித்த வீரரான ரோஹித் சர்மா, உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 வயதில் ரூ.10 கோடி சொத்து.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்.. தேடி வந்த 5 விளம்பர ஒப்பந்தம்

15 வயதில் ரூ.10 கோடி சொத்து.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்.. தேடி வந்த 5 விளம்பர ஒப்பந்தம்
Story first published: Tuesday, August 11, 2026, 14:30 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+